Categories: latest news

இந்த ஆண்டு ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் லைகா!.. அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுவா?..

லைகா நிறுவனம் இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை அடிக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலைகளை பார்த்து வருவதாக தெளிவாக தெரிகிறது. நேற்று லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.

பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது லைகா. ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவிக்காமல் விட்டாலும் தசாவதாரம் வெளியான ஜூன் 13-ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜாக்கெட் எங்கேம்மா காணோம்!.. காவியாவை பார்த்து கலாய்த்து தள்ளும் ஃபேன்ஸ்!.. இவங்கதான் இந்திராணியாம்!

இந்நிலையில், லைகா தயாரிப்பில் இருந்து அடுத்த சரவெடியாக அக்டோபர் மாதம் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்கிற செம அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்க ஞானவேல் அந்த படத்தை இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் மாத அறிவிப்பு நாளை வெளியாகுமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். அதிகபட்சமாக அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதியாவது அதிரடி அப்டேட் வெளியாகி விடும் என தெரிகிறது.

இதையும் படிங்க: விக்ரமை வைத்து எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை!.. ஆட்டைய போட்ட அஜித்!.. அட அந்த படமா?!..

இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் நவம்பர் 1ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். வியாழக்கிழமை சென்டிமென்ட் அஜித் பார்த்தால் அக்டோபர் 30ம் தேதி வியாழன் தேதி வெளியாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த ஆண்டு மிஷன் சாப்டர் 1 மற்றும் லால் சலாம் திரைப்படங்கள் லைகா தயாரிப்பில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், இந்த 3 படங்களை தான் லைகா மலைபோல நம்பியிருக்கிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு தேர்தலுக்கு அடுத்த நாள் தொடங்கும் எனக் கூறுகின்றனர். ஒரே மூச்சில் 40 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டால் தீபாவளி ரிலீஸாக வரும் என தெரிகிறது.

இதையும் படிங்க: கோலிவுட்டுக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை!.. பாலிவுட்டும் செஞ்சுரியா அடிக்கிறாங்களே.. இப்ப யாரு?

 

Saranya M

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

44 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

45 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

48 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago