தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத கதைப்பா! லீக்கான ‘விடாமுயற்சி’ படத்தின் கதை - கொஞ்சம் ரிஸ்க்தான்

ajith
Vidamuyarchi: விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அஜித், த்ரிஷா, அர்ஜூன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.
அதை முடித்துக் கொண்டு சென்னை வந்த அஜித் 10 நாள்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு சென்றிருக்கிறார். கூடவே த்ரிஷாவும் , அர்ஜூனும் சென்றிருக்கிறார்கள். இனிமேல்தான் அஜித் , த்ரிஷா, அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு சூடு ஏத்துது!.. டைட் உடையில் கிளுகிளுப்பு காட்டும் ரேஷ்மா…
படத்திற்கான இசை வழக்கம் போல ராக்ஸ்டார் அனிருத்தான். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் கதை பற்றி ஒரு அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதாவது கணவன் மனைவியாக நடிக்கும் அஜித்தும் த்ரிஷாவும் ஒரு ட்ரிப்பிற்காக வெளியூர் செல்கிறார்களாம்.
அங்கு த்ரிஷா காணாமல் போய்விடுகிறார்களாம். துரதிர்ஷ்டவசமாக த்ரிஷா வில்லன் குரூப்பில் சிக்கிவிட மனைவியை தேடும் போது ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதுதான் இந்தப் படத்தின் கதை எனகோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் வந்த நிவாரணம்! 2 கோடி கொடுத்தாரா அஜித்? யாருக்கும் தெரியாத செய்தி
ஏற்கனவே மகிழ்திருமேனி ஒரு ஒன்லைன் கதையை அஜித்திடம் கூற அஜித் அப்செட்டாகி விட்டாராம். அதனால் ஒரு ஆங்கில படத்தில் ஒரு சில காட்சிகளை மட்டும் காட்டியிருக்கிறார். அந்தப் படத்தில்தான் லவ்வர்ஸ் ட்ரிப் போகிற மாதிரி காட்டியிருப்பார்களாம்.
அதில் கொஞ்சம் மாற்றம் செய்து கோலிவுட்டிற்கு ஏற்றமாதிரி படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தெரிந்ததில் இருந்தே விடாமுயற்சி என்ற தலைப்பை பார்த்ததும் ஏதாவது ஒரு வெயிட்டான கதையாக இருக்கும் என்றுதான் கருதினார்கள். ஆனால் மனைவியை தேட அஜித் எடுத்துக் கொண்ட விடாமுயற்சி பற்றிய கதைதான் இது.
இதையும் படிங்க: தேவையில்லாம மூக்கை நுழைத்த பாக்கியராஜ்… சரிபட்டு வராதுனு முடிவையே மாத்திய சசிகுமார்…