Vidamuyarchi: குட் பேட் அக்லி படத்துக்கே ஆப்பா?... நல்லா போடுறாங்க ஸ்கெட்ச்!.. எல்லாம் அஜித் கையில இருக்கு!..
Vidamuyarchi: தொடர்ந்து விடாமுயற்சி படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்து கொண்டே வருகிறது. எப்பவோ ரிலீஸாக வேண்டிய விடாமுயற்சி திரைப்படம் சில பல காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வருகின்றது. இதனால் ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் கடுப்படைந்து விட்டனர். இன்று வரை விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு முடிவு காணப்படவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக படம் இழுத்தடித்துக் கொண்டே வருகின்றது.
விடாமுயற்சி - ஒரு பார்வை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. எச்.வினோத் இயக்கத்தில் படம் தாறுமாறாக ஓடியது. அதே நேரம் வாரிசு படமும் ரிலீஸாகி அஜித் மற்றும் விஜய்க்கு இடையில் கடுமையான போட்டியும் நிலவி வந்தது. வாரிசு படத்தை விட துணிவு படம் அமோக வரவேற்பை பெற்றது. அந்தப் பட வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
அது சம்பந்தமான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. திரைப்பிரபலங்கள் சிலரும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையில் அஜித் பைக் பயணமாக சில நாள்கள் விடுமுறை எடுத்திருந்தார். அவர் திரும்பி வருவதற்குள் ஸ்கிரிப்ட் தயாராக வைத்திருக்கும் படி விக்னேஷ் சிவனுக்கு லைக்கா நிறுவனத்தில் இருந்து சொல்லப்பட்டிருந்தது.
ஸ்கிரிப்டில் சொதப்பல்: விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்டில் திருப்தி இல்லை என லைக்கா நிறுவனம் அதை நிராகரித்தது. இதில் நயன்தாராவும் லைக்கா நிறுவனத்திடம் விக்னேஷ் சிவன் சார்பாக பேசியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் லைக்கா அதற்கு உடன்படவில்லை. அதன் பிறகே விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகினார். மகிழ்திருமேனி உள்ளே எண்டிரி ஆனார்.
இதையும் படிங்க: Ajith: தீவிர ரசிகரா இருப்பாரோ?!… கமல்ஹாசனுக்காக அஜித் செய்த விஷயம்… இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!
ஏற்கனவே தமிழ் சினிமாவில் மகிழ்திருமேனி என ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அவர் எடுத்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றன. அதனால் அஜித்தை வைத்து தரமான படத்தை கொடுப்பார் என்று மகிழ்திருமேனி மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை துரிதப்படுத்தினார் மகிழ்திருமேனி.
ரிலீஸில் சிக்கல்: முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அஜர்பைஜானில் ஏற்பட்ட காலநிலை வேறுபாடு காரணமாக படப்பிடிப்பிற்கு தடை ஏற்பட்டது. இப்படி சின்ன சின்ன பிரச்சினைகள் வர தீபாவளிக்கு ரிலீஸாக திட்டமிட்டிருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. அதிலிருந்தே இப்போது வரை விடாமுயற்சி படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறது.
இதற்கிடையில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை மைத்ரி மூவிஸ் தயாரிக்க இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இடையில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும் அந்த தேதியில் விடாமுயற்சி படத்தை கொண்டு வரலாம் என்றும் ஒரு பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது.
அஜித்தின் முடிவு: ஆனால் மைத்ரி நிறுவனத்தை பொருத்தவரைக்கும் பொங்கல் தேதியில் இருந்து பின்வாங்க போவதில்லை என்பதில் ஒரு முடிவோடு இருக்கிறார்களாம். தங்கள் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதில் உறுதியாக உள்ளனர். இதற்கிடையில் விடாமுயற்சி டீம் குட் பேட் அக்லி டீமுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பிரச்சினையை ஈஸியாக முடிக்க அஜித் ஒருவரால்தான் முடியும் என்றும் சில பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் சொன்னால் கண்டிப்பாக இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினிக்கே விபூதி அடிக்கப்பார்த்த லைக்கா!.. வேட்டையன் படத்தில் நடந்த அந்த சம்பவம்…