உழைப்பாளர் தினத்தில் பிறந்தவர் இதை தடுக்கலயே!... விடாமுயற்சி படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!...

by சிவா |
ajith
X

ajith

Vidamuyarchi: துணிவு படத்திற்கு பின் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் துவங்குவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து, பின் அவரை தூக்கி விட்டு மகிழ் திருமேனியை போட்டு, கதை இல்லாமல் பல மாதங்கள் ஓட்டினார்கள்.

இதற்கு இடையில் பைக்கை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற போய்விட்டார் அஜித். அஜித் சில ஆங்கில படங்களின் ஒன்லைனை சொல்ல அது செட் ஆகாமல் மகிழ் திருமேனியே ஒரு கதையை உருவாக்க, அதுவும் அஜித்துக்கு பிடிக்காமல் போக, அதன்பின் மகிழ் திருமேனியே ஒரு ஆங்கில படத்தின் ஒன் லைனை சொல்ல இப்போது அதுதான் விடாமுயற்சியாக உருவாகி வருகிறது.

இதையும் படிங்க: யாரும் இனிமே படத்தை பார்க்காதீங்க! அஜித்தை பற்றி பொங்கி எழுந்த தயாரிப்பாளர் – தல அப்படி என்ன செஞ்சாரு?

கிட்டத்தட்ட துணிவு படம் வெளியாகி 10 மாதங்கள் கழித்தே இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அஜித். இப்படத்தின் அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்கிறார். வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார். வெளியூருக்கு சுற்றுலா செல்லும்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திட அஜித் எப்படி அவரை தேடி கண்டுபிடித்து மீட்கிறார் என்பதுதான் கதை என சொல்லப்படுகிறது.

ajith

ajith

இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. எனவே, அந்நாட்டை சேர்ந்த சில தொழிலாளர்களும் இப்படத்தில் வேலை செய்து வருகிறார்க்ள். பல மாதங்கள் கழித்து படப்பிடிப்பை துவங்கியிருப்பதால் கேப் விடாமல் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த நாட்டு உழைப்பாளர் சட்டப்படி சனி, ஞாயிறு தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் படக்குழு கண்டுகொள்ளவில்லை.

இதையும் படிங்க: இப்பயாச்சும் நம்புங்கடா! 2 கோடி கொடுத்த அஜித் – வைரலாகும் புகைப்படம்! வேற வழி தெரியல ஆத்தா

அஜித் மே 1ம் தேதி அதாவது உழைப்பாளர் தினத்தில் பிறந்தவர். ஆனாலும், அவரும் இதை கண்டுகொள்ளவில்லை. எனவே, அந்நாட்டு தொழிலாளிகள் இதுபற்றி பஞ்சாயத்து வைக்க வாரத்தில் இப்போது வாரத்தில் ஒருநாள் மட்டும் விடுமுறை என சொல்லிவிட்டினர். எனவே, இன்று விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்கவில்லை.

அதனால், அஜித் துபாயில் இருக்கும் தனது வீட்டிற்கு போய்விட்டார். அதோடு, அவருக்கு இன்று முழு உடல் மருத்துவ பரிசோதனையும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உருவ கேலிக்கு பயந்து தயங்கி நின்ன நடிகர்! அவரை அழைத்துக் கொண்டு போய் அஜித் என்ன செய்தார் தெரியுமா?

Next Story