Connect with us
ajith

Cinema News

யாரும் இனிமே படத்தை பார்க்காதீங்க! அஜித்தை பற்றி பொங்கி எழுந்த தயாரிப்பாளர் – தல அப்படி என்ன செஞ்சாரு?

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் இன்று ஒரு மிகப்பெரிய நடிகரக வளர்ந்து நிற்கிறார். யாருமே நினைத்தப்பார்க்க முடியாத அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக வந்தவர்.

இன்று தமிழ் நாடே அஜித்துக்காக குரல் கொடுத்து வருகின்றது.கோலிவுட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் அஜித் இருக்கிறார். ஆனால் அப்பேற்பட்ட ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார்? என் பின்னாடி யாரும் வராதீர்கள். ரசிகர் மன்றங்கள் இருக்க வேண்டாம் என ஒட்டுமொத்த ரசிகர் மன்றத்தையும் கலைத்தார்.

இதையும் படிங்க: இதுக்கு ஏன்டா நான் ஃபீல் பண்ணனும்.. மணிரத்னம் படத்தில் கஷ்டப்பட்ட ரஜினிகாந்த்..!

அப்படி இருந்தும் இன்னும் அவருக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஏராளம். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்தில் ஒரு பட விழாவிற்காக சென்றிருந்தார்.அவரை கே. ராஜன் என்று அழைக்காமல் வெறும் ராஜன் என்றே அழைத்தார்கள்.

அதற்கு கே.ராஜன் என்று அழைத்தால் தான் வருவேன் என்று  கூறி அது என் அப்பாவுக்கு நான் கொடுக்கிற மரியாதை என்றும் தனக்கு வழிகாட்டியவர்களை மறக்கவே கூடாது என்றும் கூறிவிட்டு அஜித் பற்றி பேச்சை எடுத்தார்.

இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனரை லாக் செய்த விஜய்!. தளபதி 69 பரபர அப்டேட்.. அப்ப ஹிட் கன்பார்ம்!..

ரசிகர்களால்தான் இன்று உச்ச நிலையை அடைந்திருக்கிறார் அஜித். ஆனால் அவர் செய்வது மிகப்பெரிய தவறு. ரசிகர்களை ஒரு முறையாவது வந்து நேரில் சந்தித்திருக்கிறாரா? இதில் விஜயும் ரசிகர்களால்தான் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார். அவராவது அவ்வப்போது ரசிகர்களை சந்திக்கிறார்.

அடுத்ததாக அந்த ரசிகர்களுக்காக அரசியலுக்குள்ளும் வர இருக்கிறார். இப்படி இருக்கும் முன்னனி நடிகர்களை ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும். அனைவரும் கூடி ஒரு முடிவெடுக்க வேண்டும். என்னை பார்க்க வராத நடிகர்களை நாங்களும் பார்க்க வர மாட்டோம் என்று அவர்கள் படத்தை இனி பார்க்க மாட்டோம் என்று  முடிவெடுக்க வேண்டும் என்று கே.ராஜன் கூறினார்.

இதையும் படிங்க: சிவாஜி கணேசன் ஷூட்டிங் முன்னாடி இதை மறக்காம செஞ்சிடுவாராம்.. ஒருநாள் கூட மிஸ் பண்ணதே இல்லையாம்..!

google news
Continue Reading

More in Cinema News

To Top