ஒருவழியா மீட்டிங் போட்டாங்கய்யா! 'விடாமுயற்சி'யில் தேர்வான நடிகர்கள் - அட இவங்களா?

by Rohini |
vida
X

vida

அஜித்தின் விடாமுயற்சிக்கு தீர்வே இல்லாமல் சமீப காலமாக போய்க்கொண்டிருந்தது. படத்திற்கு பெயர் வச்சாலும் வச்சாங்க விடாமுயற்சிக்கு பதிலாக விட்டுட்டோம் முயற்சியை என்ற பெயரை கூட வைத்திருக்கலாம். பிப்ரவரி மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக இழுத்துக் கொண்டே போனது.

இதனிடையில் தனது இந்திய பைக் சுற்றுப்பயணத்தை முடித்த அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்ததும் தனது உலக பைக் சுற்று பயணத்தை மேற்கொள்ள இருந்தார். ஆனால் இப்போதைக்கு இந்த விடாமுயற்சியை யாரும் தொடங்குவதாக இல்லை என தெரிந்ததும் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து விட்டார்.

இதையும் படிங்க : வாய்ப்பே இல்ல!.. அதை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஷால் விவாகரத்தில் புலம்பிய மிஷ்கின்…

இந்த நிலையில் இன்று முத்தரப்பு கூட்டத்தை விடாமுயற்சி டீம் கூட்டி ஒரு முடிவை எடுத்து இருக்கிறதாம். இயக்குனர் தரப்பு அஜித் தரப்பு மற்றும் லைக்கா நிறுவன தரப்பு ஆகிய மூவரும் சேர்ந்து இன்று விடாமுயற்சி படத்தை பற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.

அதில் நடிகர் நடிகைகளை பற்றிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாம். ஆனால் படத்தில் கண்டிப்பாக திரிஷா இருப்பது உறுதியாகிவிட்டதாம். மற்ற துணை நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வேலை நடந்து கொண்டு இருக்கிறதாம்.

இதையும் படிங்க : வேண்டுமென்றே ஒதுக்கப்பட்ட தமன்னா… இதுக்காகவா இப்படி செஞ்சாங்க.. அட கடவுளே..

எப்படியும் இந்த மாத இறுதியில் விடாமுயற்சிக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் அர்ஜுன் இருப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

இதை அறிந்த ரசிகர்கள் இது என்னப்பா லியோ டீமை அப்படியே காப்பி அடித்து விட்டார்களா விடாமுயற்சி டீம் என எப்பவும் போல இணையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story