அப்பாடி இப்பவாது மனசு வந்துச்சே… அஜித்தின் திடீர் செயல்… கலக்கத்தில் இருந்த மகிழ் திருமேனியே குஷி ஆகிட்டாரு!

by Akhilan |
அப்பாடி இப்பவாது மனசு வந்துச்சே… அஜித்தின் திடீர் செயல்… கலக்கத்தில் இருந்த மகிழ் திருமேனியே குஷி ஆகிட்டாரு!
X

Ajith: அஜித்தின் விடாமுயற்சி படம் கொஞ்சமும் நகராமல் இருந்து வந்த நிலையில், அந்த பிரச்னைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு விஷயம் நடந்து இருக்கிறது. இதனால் இயக்குனர் மகிழ் திருமேனி ரொம்பவே குஷியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் ஒரு பக்கம் லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ரஜினிகாந்த் தன்னுடைய ஜெய்லர் பட வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர்களுக்கு இணையாக பார்க்கப்படும் அஜித் எதை பற்றியும் கவலையே இல்லாமல் பைக் ரைட் செய்து வந்தார்.

இதையும் படிங்க: உன் படத்தை 1000 ரூபாய் கொடுத்து யாராவது பார்ப்பானா!.. ரஜினி பற்றி எஸ்.வி. சேகர் பேச்சு!..

கிட்டதட்ட 8 மாதங்களுக்கும் மேலாக அஜித்தின் படம் நகரவே இல்லை. படத்தில் இவர் நடிக்கிறார், நடிக்கவில்லை என யூகங்களின் அடிப்படையில் மட்டுமே சில தகவல்கள் வெளியானது. உறுதியாக எதுவும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

விக்னேஷ் சிவனை தூக்கி விட்டு மகிழ் திருமேனியை லைகா நிறுவனம் இயக்குனராக அறிவித்தது. ஒரு கட்டத்தில் படத்தின் வேலைகள் தொடர்ச்சியாக தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இதனால் லைகா நிறுவனம் விடாமுயற்சியை கைவிடும் எனக் கூறப்பட்டது. இதனால் மகிழ் திருமேனி நிலமையும் விக்னேஷ் சிவன் நிலமை தான் எனக் கூறப்பட்டது.

இதையும் படிங்க: கேரளா கோட்டைன்னு அதகளம் பண்ணது தான் காரணமா?.. மோகன்லால் ரசிகர்கள் இந்த பொள பொளக்குறாங்களே!..

இந்நிலையில் சமீபத்தில் லைகாவுடன் அஜித் பட டிஸ்கஷனில் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ரொம்ப நாட்களாக பிஸியாக இருந்த பைக் ட்ரிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி இருக்கிறார். இதனால் இந்த மாத இறுதியில் இல்லை அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா, வில்லனாக ஆரவ் மட்டுமல்லாமல் லியோ வில்லனான சஞ்சய் தத்தும் இணைந்து இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Next Story