எல்லா கோட்டையும் அழிங்க!. முதல்ல இருந்து ஆரம்பிப்போம்.. வெற்றிமாறனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் சூரி..

by Akhilan |   ( Updated:2024-02-12 02:18:49  )
எல்லா கோட்டையும் அழிங்க!. முதல்ல இருந்து ஆரம்பிப்போம்.. வெற்றிமாறனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் சூரி..
X

Viduthalai: விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து. அதன் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. விரைவில் அதன் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் ஒரு ட்விஸ்ட் நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடம் ஏற்று இருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஜனகராஜுக்கு பேர் வாங்கி கொடுத்த அந்த காமெடி!.. எல்லாத்துக்கும் ரஜினிதான் காரணமாம்!..

சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் இருப்பதாக வெற்றிமாறன் கூறி இருந்தார். இதனால் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் முடிந்துவிடும் என கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அதில் ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்து இருக்கிறது.

விடுதலை இரண்டாம் பகுதியில் சூரியை விட விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அவருக்காக மூன்று பிரம்மாண்ட சண்டை காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இதையும் படிங்க: பாம்புனா கொத்ததான் செய்யும்.. என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா? வடிவேலுவை தோலுரித்த ஆர்த்தி

அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதியை இள வயதில் காட்ட டி ஏஜிங்கும் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதால் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகும் என்றே கூறப்படுகிறது. இதனால் சூர்யா பாலிவுட்டில் பிஸியாகி விடும் என்ற நிலை உருவாகி வாடிவாசல் படத்தினை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

Next Story