ஆத்தாடி ஒருவழியா மனசு வந்துச்சே… விடுதலை 2 குறித்த சூப்பர் அப்டேட்

Published on: November 23, 2024
Viduthalai
---Advertisement---

Viduthalai 2: விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியர் இருவரும் முக்கிய வேடத்தில் நடந்து வரும் விடுதலை2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் 1987ம் ஆண்டு நடந்த போலீஸ் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரையில் வெளியானது.

இதையும் படிங்க: ‘கங்குவா’ படத்துக்கு விதை நான் போட்டது.. யாராச்சும் இத செஞ்சீங்களா? ஆவேசமான கூல் சுரேஷ்

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இளையராஜாவின் இசையில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

முதலில் இப்படம் ஒரே பாகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல் பாகத்தை போல இப்பாகத்தில் அதே பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இவர்களுடன் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.

முதல் பாகத்தின் ஷூட்டிங் போதே இரண்டாம் பாகத்தின் காட்சிகள் இருந்தாலும் மீண்டும் சில ஷூட்டிங் தேவைப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: Lubber Pandhu: படம் ஹிட்டுனா கிஃப்ட் கொடுப்பாங்க! லப்பர் பந்து பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்.. பெரிய மோசடி

ஆனால் பெரிய இழுவைக்கு பின்னர் தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கை படக்குழு வெற்றிகரமாக முடித்து விட்டதாம்.

விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை முடிந்துவிட்டதால் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் விரைவில் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.