ராசியில்லாத நடிகை என்று பரவிய வதந்தி… வரிசையாக பல படங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சோக சம்பவம்!!

Vidya Balan
ஒரு நடிகரோ நடிகையோ, தனக்கான முதல் படம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அத்திரைப்படத்தின் வீச்சுதான் அவர்களது கேரியரையே முடிவு செய்யும். ஆனால் முதல் படத்திலேயே ராசி இல்லாத நடிகை என்று வதந்தி பரவியதால் ஒரு பிரபல நடிகைக்கு வரிசையாக பல திரைப்படங்களில் வாய்ப்பு பறிபோயிருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்!

Vidya Balan
பாலிவுட்டில் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் வித்யா பாலன். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் நடித்ததை நம்மால் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தான் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
வித்யா பாலன் 2000 ஆம் ஆண்டு ஒரு மலையாளத் திரைப்படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் டிராப் ஆனது. மோகன் லாலுடன் நடிப்பதால் அந்த சமயத்தில் கிட்டத்தட்ட ஏழெட்டு மலையாள திரைப்படங்களில் வித்யா பாலனை ஒப்பந்தம் செய்தார்களாம்.

Vidya Balan and Mohanlal
ஆனால் வித்யா பாலன், மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்த அத்திரைப்படம் சில காரணங்களால் டிராப் ஆனது. வித்யா பாலன் ராசியில்லாத நடிகை, அதனால்தான் டிராப் ஆகிவிட்டது என வதந்தி பரவியிருக்கிறது. இதனால் அவர் ஒப்பந்தமான அனைத்து திரைப்படங்களில் இருந்தும் அவரை நீக்கி விட்டார்களாம். மேலும் தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் நடிப்பதாகவும் இருந்ததாம். அந்த படங்களில் இருந்து நீக்கப்பட்டாராம்.
மாதவன் நடிப்பில் சக்கை போடு போட்ட “ரன்” திரைப்படத்தில் கூட முதலில் கதாநாயகியாக வித்யா பாலனைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.