More
Categories: Cinema News latest news

எல்ஐசி பெயர் சர்ச்சை!.. ஆட்டோ கண்ணாடியை திருப்பிய விக்னேஷ் சிவன்!.. இப்போ என்ன பண்ணுவாங்க!..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தை சுருக்கமாக எல்ஐசி என அழைத்து வந்தனர். ஆனால், அதற்கு அதிரடியாக எல்ஐசி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

ஒரு வாரத்துக்குள் படத்தின் பெயரை மாற்றவில்லை என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்வோம் என்றும் எச்சரித்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரஜினியோட மோதுறேனா!.. அடபோங்கய்யா.. ஒரே ஓட்டம் எடுத்த ஜெயம் ரவி.. சைரன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

அதற்கு பயந்த எல்ஐசி படக்குழு உடனடியாக படத்தின் பெயரை எல்லாம் மாற்றாமல் சிம்பிளாக ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் எப்படி பாஸ் வண்டி ஓடும் என்பது போல ஒரே ஒரு எழுத்தை மாற்றி பிரச்சனையை விக்னேஷ் சிவன் சால்வ் செய்திருக்கிறார்.

நயன்தாரா கணவர் சாமார்த்தியசாலி தான் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.  அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா? LOve insurance Corp என LOC என தனது படத்தின் பெயரை மாற்றி உள்ளார்.

இதையும் படிங்க: விக்கியை அஜித் கழட்டிவிட்ட கடுப்பா தெரியலயே!.. இயக்குனரை கழட்டிவிட்ட நயன்தாரா..

அதன் அறிவிப்பை தற்போது இன்ஸ்டாகிராமில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுடன் தீயாக ஓய்வின்றி உழைத்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார். ஈஷா யோகா மையத்தில் தற்போது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். விக்னேஷ் சிவனும் ஹாஷ்டேக்கில் ஈஷா யோகா மையத்தை டேக் செய்திருக்கிறார்.

விஜய்யின் கோட் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெரிய டைட்டிலில் வந்த நிலையில், விக்னேஷ் சிவன் படமும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்றே முழு நீள டைட்டிலாக வெளியாகுமா? LOC என்றால் அர்த்தமே வராதே என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts