விக்கியை அஜித் கழட்டிவிட்ட கடுப்பா தெரியலயே!.. இயக்குனரை கழட்டிவிட்ட நயன்தாரா..

Nayanthara: போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைய துவங்கினார். விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நடிக்கும்போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதலும் மலர்ந்தது.

இப்போது திருமணமாகி வளர்ப்புத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் இருவரும் அப்பா - அம்மாவும் ஆகிவிட்டனர். அதேநேரம், நயன்தாராவுக்கு இப்போது போதாத காலம் போல. கடந்த 2 வருடங்களாக அவரின் நடிப்பில் வெளியான எந்த தமிழ் படமும் சரியாக ஓடவில்லை. அட்லி இயக்கத்தில் அவர் நடித்த ஹிந்தி படமான ஜவான் மட்டுமே ஓடியது.

இதையும் படிங்க: லியோ படத்துல வந்த பஞ்சாயத்து நமக்கு வரக்கூடாது!. கங்குவா-வில் அலார்ட் ஆன சூர்யா…

அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னப்பூரணி படம் தியேட்டரில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. மேலும், அப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு வசனத்திற்காக அப்படம் ஓடிடியில் இருந்து தூக்கப்பட்டது அவரை பெரிதும் அப்செட் ஆக்கியது. இதைத்தொடர்ந்து நயன்தாரா மன்னிப்பும் கேட்டார்.

ஒருபக்கம், நடிக்கும் படங்கள் எல்லாம் ஓடாத நிலையில் தற்போது நடிக்கவுள்ள படங்களிலும் பஞ்சாயத்தை இழுத்து வருகிறார் நயன்தாரா. கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நயன்தாரா ஒரு புதிய படத்தில் நடிக்கவிருந்தார். பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதை இது.

இதையும் படிங்க: அந்த கில்மா படத்தில் நடிச்சதே பாருங்க! இது ரஜினியை பத்தி பேசுதா? ரம்பாவை கிழித்தெடுத்த பிரபலம்

ஆனால், சமீபத்தில் அவரை அழைத்து கதையை மீண்டும் கேட்ட நயன் இந்த படம் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்காக அருண்ராஜுக்கு ஆபிஸ் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். நயன்தாரா இப்படி சொல்லிவிட்டதால் ‘ஆபீசை காலி பண்ணுங்க’ என சொல்லிவிட்டாரம் தயாரிப்பாளர்.

இருண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேய் என சொல்வது போல அருண்ராஜ் போன்ற நல்ல கதாசிரியர் மற்றும் இயக்குனரையும் நயன்தாரா நம்பாமல் போனது அவரின் துரதிஷ்டம்தான். அஜித்தின் படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து தூக்கப்பட்டார். அந்த கோபத்தையெல்லாம் இப்போது நயன் காட்டுகிறாரா என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: எப்ப பாரு பொய் பேசும் திரை நட்சத்திரங்கள்!.. ரசிகர்களை காக்கா பிடிக்க அதையே செய்யும் விஷால்!..

 

Related Articles

Next Story