தமிழ் எழுதப்பட்ட சில முக்கிய நாவல்களில் குற்றப்பரம்பரையும் ஒன்று. இந்த நாவலை வேல ராமமூர்த்தி எழுதியிருந்தார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி கடந்த பல வருடங்களாகவே பல திரைப்படங்களிலும் நடித்து விட்டார். இவர் எழுதியுள்ள குற்றப்பரம்பரை நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் பாலா ஒரு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். மறுபக்கம் கதாசிரியர் ரத்தினகுமார் எழுதிய குற்றபரம்பரை கதையை அடிப்படையாக வைத்து பாரதிராஜா ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார்..
இதையடுத்து, பாரதிராஜாக்கும், பாலாவுக்கும் இடையே முட்டிக்கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி பேட்டி கொடுத்தார்கள். அதன்பின் இருவரும் சமாதானம் அடைந்தனர். ஆனால் இரண்டு பேருமே அந்தப் படத்தை எடுக்கவில்லை. தற்போது பாரதிராஜா காலமாகிவிட்டார்.

இந்நிலையில்தான் இந்த இரண்டு கதைகளும் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரிடம் வந்திருக்கிறது. வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரையும், ரத்னவேல் எழுதிய குற்றப்பரம்பரையும் வெவ்வேறு கதைகள் என்கிறார்கள். அதாவது, ரத்தினகுமார் எழுதிய குற்ற பரம்பரை கதை தேனி மாடத்தில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த கதையை சசிகுமார் இயக்கி அதில் அவர் நடிக்கவுள்ளார்.
அதேபோல், வேல ராமமூர்த்தி எழுதியுள்ள குற்றப் பரம்பரை நாவல் ராமநாதபுரத்தை பின்புலமாக கொண்டது. இதை சசிகுமார் வெப்சீரியஸாக இயக்கப் போகிறாராம். அதில் அவர் நடிக்கவில்லை. இதில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். இந்த இரண்டு படத்தின் வேலைகளும் தற்போது ஒரே நேரத்தில்நடந்து வருகிறது.
குற்றப்பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்டபோது குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்தவர்களை பிறப்பிலேயே குற்றவாளிகளாக முத்திரை குத்தி, அவர்களைக் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்த ஒரு கொடூரமான காலனித்துவச் சட்டமாகும். அதைப்பற்றியே இந்த கதைகள் பேசுகிறது.




