கல்யாணத்துக்கு எங்களை கூப்பிடவே இல்லை!....கண்கலங்கும் விக்னேஷ் சிவனின் அம்மா!.....

by சிவா |
vignesh
X

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கன், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், விக்னேஷ் சிவனின் பெரியம்மா இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்கவே இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.விக்னேஷ் சிவன் அப்பாவின் சகோதரர் மனைவி இவர். சென்னையில் வசித்து இவர் ‘சிறு வயதில் பள்ளி விடுமுறையின் போது விக்னேஷை அவரின் அப்பா இங்கே அழைத்து வருவார். இங்கே சில நாட்கள் தங்கி செல்வார்கள். திருமணத்திற்கு எங்களை அழைப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை.

விக்னேஷ் சிவனை எங்களின் குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என நான்தான் கூறினேன். ஆனால், அவரும், நயன்தாராவும் தனியாக சென்று அதை செய்தனர். அப்போதும் எங்களை அழைக்கவில்லை. அதுவே வருத்தம்தான். தற்போது திருமணத்திற்கும் அழைக்கவில்லை. விக்னேஷ் சிவன் மனதில் என்ன இருக்கும் என எனக்கு தெரியவில்லை. விக்னேஷ் சிவன் - நயன்தாரா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தால் சந்தோஷப்படுவோம்’ என அவர் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.

Next Story