Connect with us

Cinema News

விரட்டி விட்ட அஜித்!.. விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை தந்த விஜய் பட தயாரிப்பாளர்.. தளபதி தான் சொன்னாரா?..

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் படத்தை இயக்கும் போது நடிகை நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ரகசியமாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கூறி வந்த நிலையில், கடந்த ஆண்டு சினிமா பிரபலங்களை அழைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

வாடகை தாய் மூலமாக உயிர் மற்றும் உலகம் எனும் ட்வின்ஸ் ஆண் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் சரியாக ஓடவில்லை. மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கூடுதலாக சமந்தாவும் இணைந்து கொண்டார்.

இதையும் படிங்க: எனக்கு வேற பொழப்பு இருக்கு!.. புருஷன் படத்தை கழட்டி விட்ட நயன்தாரா.. ஆத்தி பூஜைக்கு கூட வரலையே!

கடந்த ஆண்டு வெளியான அந்த திரைப்படம் நல்ல வசூல் வேட்டைஆடிய நிலையில் நடிகர் அஜித்குமார் தனது 62-வது படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு வழங்கியிருந்தார். அனால், அஜித் விரும்பிய கதையை கடைசி வரை விக்னேஷ் சிவன் உருவாக்காத நிலையில் அந்த படத்திலிருந்து அதிரடியாக அவர் நீக்கப்பட்டார்.

தற்போது விஜயின் லியோ படத்தை தயாரித்து மிகப்பெரிய வெற்றியடைந்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் அஜித் துரத்தி அடித்த விக்னேஷ் இவனுக்கு படம் இயக்கும் வாய்ப்பை அவன் தயாரிப்பாளர் லலித்குமார் கொடுத்துள்ளார். இன்று அந்தப் படத்திற்கு பூஜை போடப்பட்டது. சமீபகாலமாக எஸ் ஜே சூர்யா நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் அடித்து வரும் நிலையில் இந்த படத்திலும் அவர் இணைந்துள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க: இது வேறமாறி வெற்றி!.. ஓடிடி தளத்தில் துவம்சம் பண்ண துணிவு.. இத்தனை கோடி பேர் பார்த்துருக்காங்களா!

அஜித் மற்றும் லைகா நிறுவனம் நயன்தாராவின் கணவர் விக்கியை தூக்கி இருந்த நிலையில், எல்ஐசி படத்தின் மூலம் தான் எவ்வளவு பெரிய ஹைட் என்பதை விக்னேஷ் சிவன் நிரூபிக்க காத்திருக்கிறார். மேலும், நடிகர் விஜய் சொல்லித்தான் விக்னேஷ் சிவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்றும் இந்த படம் வெற்றியடைந்தால் அடுத்து விஜய்யை இயக்கும் வாய்ப்பே விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top