மீண்டும் ‘பில்லா’ ரேஞ்சுக்கு இறங்கிய நயன்தாரா! விக்கியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா? இததான் எதிர்பார்த்தோம்
Actress Nayanthara: நடிகைகளை பொறுத்த வரைக்கும் திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்குவதை தான் வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் பெரும்பாலும் குழந்தைகள் பிறந்த பிறகும் சினிமாவில் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சினேகா, ஜோதிகா போன்ற பல நடிகைகளை உதாரணமாக கூறலாம்.
இதில் நயன்தாராவும் அடங்குவார். விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா இரு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். ஷூட்டிங் தவிர்த்து மற்ற நேரத்தை தன் குழந்தைகளுடன் செலவிடுவதை முதல் கடமையாக வைத்திருக்கிறார். அவ்வப்போது தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கோட் இரண்டாவது சிங்கிள் எப்போ தெரியுமா? விசில் போடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
ஆரம்ப காலங்களில் நயன்தாரா கிளாமர் உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடித்து வந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் கவர்ச்சி உடைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பில்லா படத்தில் தான் நயன்தாரா மிகவும் கவர்ச்சியாக காணப்பட்டார். அதுவும் பிகினி உடையில் தனது ஒட்டுமொத்த கவர்ச்சியையும் பில்லா படத்தில் தான் காட்டியிருந்தார்.
இப்பொழுது அதே மாதிரியான கிளாமர் உடையில் நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு பட விழாவிற்கு வருகை தந்த நயன்தாரா முற்றிலும் கவர்ச்சியாக அதுவும் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கிளாமர் உடையில் வருவது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க: ராமராஜன் கொடுத்த லவ் லெட்டர்! பொக்கிஷமாக வைத்திருக்கும் நளினி.. என்ன எழுதியிருக்கார் தெரியுமா
இதை பார்த்த ரசிகர்கள் பில்லா நயன்தாரா இஸ் பேக் என்று கமெண்ட்களை அள்ளி தெரித்து வருகிறார்கள். இதில் விக்னேஷ் சிவனும் தன்னுடைய ரியாக்ஷன் என்ன என்பதை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் நயன்தாராவின் அந்த புகைப்படத்தை பதிவிட்டு மிகவும் ரொமான்டிக்கான ஒரு பாடல் வரியையும் சேர்த்து நயனை இன்னும் தான் விரும்புவதாக கூறியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/stories/wikkiofficial/3354785445316930248?utm_source=ig_story_item_share&igsh=ejl4OXdvczRwbDNm