தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். பெரிய டாப் ஹிட் படங்களை விக்னேஷ் சிவன் கொடுத்ததில்லை என்றாலும் கூட ஆவரெஜ் ஹிட் படங்கள் சிலவற்றை கொடுத்துள்ளார்.
அவரது முதல் படமான போடா போடி திரைப்படம் பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது.
ஆனால் அதற்கு பிறகு அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் பெரிதாக வெற்றியடையவில்லை. இந்நிலையில் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த படத்தின் கதை அவ்வளவாக திருப்திகரமாக இல்லை என லைக்கா நிறுவனம் அந்த கதையை மறுத்துவிட்டது.
விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்:
தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது அவரது திரைப்படத்தின் கதைகள் குறித்து பேசப்பட்டது. அப்போது விக்னேஷ் சிவன் கூறும்போது எனக்கு பிடித்த கதைகளை மட்டுமே நான் படமாக்குகிறேன். அது தோற்றாலும் ஜெயித்தாலும் அதுக்குறித்து எனக்கு எந்த கவலையுமில்லை.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையை பல ஹீரோக்களிடம் கூறினேன். பலரும் அதன் க்ளைமேக்ஸை மாற்ற சொன்னார்கள். ஆனால் அதை மாற்ற நான் தயாராக இல்லை. ஒரு கதாநாயகனுக்காக நான் படத்தின் கதையை மாற்ற மாட்டேன் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
எனவே அஜித் திரைப்படத்திற்கும் கூட இதே பாணியில்தான் கதையை மாற்ற மாட்டேன் என கூறியிருப்பாரா விக்னேஷ் சிவன்? என்கிற கேள்வி எழுகிறது. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அவருக்காக தன் படத்தின் கதையை மாற்றிக்கொள்ள விக்னேஷ் சிவன் தயாராக இல்லை என இதன் மூலமாக தெரிகிறது.
இதையும் படிங்க: இது கமலோட கதை- ரஜினிகாந்த் லெஃப்ட் கையால் தள்ளிவிட்ட ஸ்கிரிப்ட்… என்னவா இருக்கும்!
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…