ரொம்ப நாளா விஜயகாந்த் மேல இந்த பழி இருக்கு!.. ஆனா உண்மையில் இதான் நடந்தது… ராதாரவி சொன்ன உண்மை..
Vijayakanth: தமிழ் சினிமாவில் இருந்தது போலவே உண்மையான குணத்துடன் இருப்பவர் தான் விஜயகாந்த். முடியாதவர்களுக்கு அத்தனை உதவி செய்தவருக்கு கோவம் மூக்குக்கு மேல் வருமாம். சண்டை என்றால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிற்பார்.
அப்படி அவர் செய்த எல்லாமுமே சினிமாவை தாண்டி அரசியலுக்கு வரும் போதும் செய்து இருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசும் போது துப்பியது, வாங்க அடிக்க மாட்டேன் என அவர் பேசியது எல்லாம் அப்போது வைரல் லிஸ்ட்டில் இடம் பெற்றது.
இதையும் படிங்க: 2023ல் விட்டத்தை 2024ல் பிடிக்க தயாராகும் கோலிவுட் சினிமா!.. அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!
பொது கூட்டத்தில் கூட அவர் அவராகவே இருந்தார். ஆனாலும் ஒரு முறை சட்டசபையில் ஒரு விவாதத்தின் போது ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துறுத்தினார் என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு முதல்வரை பார்த்து இப்படி நடந்து கொள்ளலாமா என பலரும் விவாதமே நடத்தினர்.
ஆனால் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ராதா ரவி இந்த விஷயம் குறித்து அன்று இரவே விஜயகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போ நடந்த விஷயங்களை தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், நானும், அவரும் அரசியலுக்கு பின்னர் நெருக்கம் இல்லை. அந்த நாளில் விஜயகாந்த் வீட்டுக்கு போனேன்.
இதையும் படிங்க: 400 கோடி பெருசா? 4000 கோடி பெருசா? பெரிய இலக்கை நோக்கி படையெடுக்கும் விஜய்
அவரை பார்த்து தான் அப்படி செஞ்சேன். அம்மாவை அப்படி செய்யலை என்றார். இதனால் அம்மா கவனிக்காமல் விஜயகாந்த்தை தப்பாக நினைத்துவிட்டார் எனவும் ராதாரவி குறிப்பிட்டு இருக்கிறார். அவர் மேல் இருந்த சில பழிகளில் இதுவும் தற்போது இல்லை என முடிவாகி விட்டது.