லோகேஷ் கனகராஜ்-விஜய் படத்திற்கு வந்த சிக்கல்.. தலையில் குண்டை தூக்கிப்போட்ட வாரிசு இயக்குனர்…

by Arun Prasad |   ( Updated:2022-09-27 12:06:48  )
லோகேஷ் கனகராஜ்-விஜய் படத்திற்கு வந்த சிக்கல்.. தலையில் குண்டை தூக்கிப்போட்ட வாரிசு இயக்குனர்…
X

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு, சரத்குமார் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவந்த நிலையில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆதலால் சிறிது நாள் அவர் ஓய்வில் இருந்ததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

எனினும் தற்போது வம்சி பைடிப்பள்ளியின் உடல்நிலை சரியான நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஆனால் இப்போதுதான் ஒரு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. அதாவது ஏற்கனவே விஜய், வம்சிக்கு கொடுத்த கால்ஷீட் நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் 40 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கேட்டுள்ளாராம் வம்சி. இதனால் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாம்.

அதாவது விஜய்யின் 67 ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்பது உறுதியாகியுள்ளது. “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளன. ஆனால் தற்போது வம்சி பைடிப்பள்ளி, விஜய்யிடம் இன்னும் 40 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கேட்டிருப்பதால் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

“வாரிசு” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் “வாரசுடு” என டைட்டில் வைத்திருக்கிறார்கள். எனினும் இந்த வருட இறுதியில் லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நீடிக்கும் என்பதால், லோகேஷ் படத்தின் பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விஜய்யின் 67ஆவது திரைப்படத்தில் 6 வில்லன்கள் என தகவல்கள் வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் கமல்ஹாசனை வைத்து இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆகியுள்ள நிலையில் “தளபதி 67” திரைப்படத்திற்கு எக்ஸ்பெக்டேஷன் எகிறியுள்ளது. மேலும் இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸுக்குள் வருமா? எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Next Story