சக நடிகைகளை கொச்சையாக பேசினாரா விஜய்.. பெருமையாக பேசுவதாக வம்பினை இழுத்து விட்ட ஷாம்...

நடிகர் விஜய் குறித்து பெருமையாக பேசிகிறேன் என்ற பெயரில் அவர வம்பில் இழுத்து விட்டு இருக்கிறார் நடிகர் ஷாம். இதுகுறித்து ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு. இப்படத்தினை வம்சி இயக்கி இருக்கிறார். ராஷ்மிகா, ஷாம், குஷ்பூ, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜயின் சகோதரராக ஷாம் நடித்து இருக்கிறார்.

Varisu
வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக ஷாம் தற்போது தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அதில் விஜய் குறித்தும், வாரிசு படம் குறித்தும் நிறைய தகவல்களை தெரிவித்து வருகிறார். அதில் சமீபத்தில் அவர் சொன்ன ஒரு தகவல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
இதையும் படிங்க: கை கொடுத்த விஜய்.. கால வாறிவிட்ட அஜித்.. ‘தீ..தளபதி’ பாடலை சிம்பு தெறிக்க விட பின்னனியில் இருக்கும் காரணம் இதோ!…
அதாவது ஷாம் 12பி படத்தில் தான் அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோதிகா மற்றும் சிம்ரன் என இரண்டு முன்னணி நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தனர். இதுகுறித்து ஷூட்டிங்கில் விஜயிடம் பேசும் போது முதல் படத்திலேயே இரண்டு குதிரைகள் ஓட்டிட்டு வந்திருக்க யாருடா நீ என என்னிடம் கேட்டார் என ஷாம் தெரிவித்து இருந்தார். ஆனால் இது ஷாம் பேச்சு வழக்கில் சொன்ன வார்த்தையா? இல்ல தளபதியே சொன்ன வார்த்தையா? என்பது குறித்து தெரியவில்லை.

jothika simran
இது தேவையில்லாத வம்பு தான். இதனால் சர்ச்சை அதிகரித்துள்ளது. இதற்கு விஜய் தரப்பில் இருந்து எதுவும் விளக்கம் அளிக்கப்படுமா இல்ல ஷாமே மன்னிப்பு கேட்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் தான் காமெடி நடிகர் சதீஷ் மேடையில் நடிகை தர்ஷா குப்தாவை காமெடியாக பேசுகிறேன் என கலாய்த்து பேசினார். பின்னர் பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டது தான் மிச்சம். இனிமேலாவது நடிகர்கள் பேசும் போது வார்த்தையை கவனித்து பேசுங்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.