இந்தா எடுத்துக்கோ- லோகேஷிடம் மட்டும் கர்ணனாக மாறிய விஜய்… இப்படியெல்லாம் பண்றாரா!
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் 54 நாட்கள் நடைபெற்று வந்தது. அதன் பின் தற்போது சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, தனது வலைப்பேச்சு வீடியோவில் விஜய் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது எப்போதும் விஜய் ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது நடுவில் ஒரு பத்து நாட்கள் இடைவெளி விட்டு விட்டு நடிப்பதுதான் வழக்கமாம். ஆனால் “லியோ” படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றபோது தொடர்ந்து 54 நாட்களும் நடித்துக்கொடுத்தாராம்.
அதே போல் தற்போது சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம். இதற்கும் விஜய் தனது அதீத ஒத்துழைப்பை தந்திருக்கிறார். இவ்வாறு தனது கால்ஷீட் நாட்களை “லியோ” படத்திற்காக விஜய் அள்ளிக்கொடுத்திருக்கிறார் என்று பிஸ்மி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
விஜய் ஏன் இவ்வாறு இடைவெளியே இல்லாமல் நடித்துக்கொடுக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் இருப்பதாக பிஸ்மி கூறுகிறார். அதாவது “லியோ” படத்திற்கு விஜய் மறைமுக தயாரிப்பாளர் என்றும் கூறுகிறார் பிஸ்மி.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்குள் வந்தால் நானும் வருவேன்- ஓப்பன் ஸ்டேட்மண்ட் விட்ட பிரபல காமெடி நடிகர்…