சிவகார்த்திகேயன் கேட்டதால் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஹீரோ நடிகர்....
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டுமே. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதனை படைத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே வெற்றி பெற்று வந்தது.
ஆனால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன. இருப்பினும் இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிங்க: வந்தான் சுட்டான் போனான் Repeat…. அப்துல் காலிக் ஆட்டம் ஆரம்பம் ” மாநாடு” ட்ரெய்லர்!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் வினய் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தான் இவர் டாக்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் வினையிடம் ஹீரோவாக இருந்த உங்களுக்கு வில்லனாக மாற வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது என கேள்வி கேட்டனர்.
இதையும் படிங்க: சிவாஜி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.. வெளியான தகவல்.!!
இதற்கு பதிலளித்த வினய், "துப்பறிவாளன் படத்தில் மிஷ்கின் தான் முதன் முதலில் வில்லனாக என்னை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து வில்லனாக நடிக்க முடியுமா என கேட்டார். அதன் பிறகு கதையை கேட்டுவிட்டு சம்மதித்தேன். அதோடு ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிக்கலாம்" என கூறியுள்ளார்.