யாரை தூக்குனா விஜய் சிக்குவாருனு தெரியும்!..தளபதியை விடாமல் துரத்தும் டோலிவுட்!..காத்திருக்கும் அடுத்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் தளபதியாக இளைய சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் வாரிசு படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் வருகிற பொங்கல் அன்று படம் திரைக்கு வரவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 67 படத்தில் இணைய இருக்கிறார் விஜய்.
இதையும் படிங்க : ஆசையாக கேட்ட அட்லீ… சில கண்டிஷன்களுடன் ஓகே சொன்ன தளபதி…
இந்த நிலையில் ஏற்கெனவே வாரிசு படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி கொண்டிருக்க மற்றுமொரு தெலுங்கு படத்தில் விஜயை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது.
புஷ்பா பட புகழ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் விஜயின் 68 வது படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்கப்போகிறவர் அட்லி என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே விஜய் - அட்லீ கூட்டணியில் தொடர்ந்து 3 படங்கள் ஹிட் படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீயை தன் தம்பியாகவே நினைக்ககூடியவர் விஜய். மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் விஜயின் 68 வது படத்தை அட்லீ இயக்குகிறார் என்ற தகவலும் வந்து கொண்டிருக்க ஒருவேளை தயாரிப்பு நிறுவனம் தான் மாற்றப்பட்டதா? இல்லை மற்றுமொரு புதிய ஒப்பந்தமா? என்று தெரியவில்லை. இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவர வரைக்கும் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.