நட்புன்னா இது தான்டா நட்பு.! வலிமைக்கு பக்க பலமாய் நிற்கும் விஜயின் அரசியல் வாரிசுகள்.!
வழக்கமாக இணையத்திலும் சரி, நிஜ உலகிலும் சரி அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக தான் இருப்பர். ஆனால் உண்மையில் விஜய் மற்றும் அஜீத் தங்களுக்குள் நட்பு பாராட்டி தான் வருகின்றனர். இருந்தாலும் தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
இதனை புரிந்து கொண்ட சில நல்ல ரசிகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விஜய் படம் வெளியானால் ரசிகர்கள் சார்பாக கட்அவுட் பேனர் வைக்கின்றனர். அதேபோல அஜித் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் தங்கள் சார்பில் கட்அவுட் பேனர்களை வைக்கின்றனர்.
இதையும் படியுங்களேன் - இதுக்கு விவேகமே பரவாயில்லையா.?! கதறும் ரசிகர்கள்.! இணையத்தை அதிரவைத்த வலிமை.!
அப்படித்தான் கன்னியாகுமரி நாகர்கோயில் தொகுதி விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் வெற்றியடைய வாழ்த்து கூறி தங்கள் மன்றம் சார்பில் பேனர் அடித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் முக்கிய திரையரங்கில் முன்பக்கத்தில் விஜய் அஜித் இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பேனர் அடித்துள்ளனர். விஜய் அஜித் ரசிகர்களிடையே இந்த நட்பு எல்லா பக்கமும் பரவியிருக்க வேண்டும் என்பதே விஜய் அஜித் அவர்களின் நோக்கமாக இருக்கும். போட்டிருக்க வேண்டும் ஆனால், அது ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் அது சினிமா துறைக்கு நல்ல பலனை தரும். ரசிகர்களுக்கும் நல்ல நல்ல சினிமாக்கள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.