தளபதி விஜய் நடிப்பில் அமீர் இயக்கத்தில் 'கண்ணபிரான்'.! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!

by Manikandan |
தளபதி விஜய் நடிப்பில் அமீர் இயக்கத்தில் கண்ணபிரான்.! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!
X

மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் எனும் தரமான திரைப்படங்களை இயக்கியவர் அமீர். ஆதிபகவன் திரைப்படத்திற்கு பிறகு 9 வருடம் கழித்து தற்போது இறைவன் மிகப் பெரியவன். எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

அமீர் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, நிருபர், 'நீங்கள் விஜய்க்கு ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அது என்ன ஆயிற்று?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் தனது பதிலை கூறினார்.

அதாவது, ராம் திரைப்படத்தின் கதை முதலில் விஜய்க்கு கூறப்பட்டதாம். அதன் பிறகு அதில் விஜய்க்கு ஏற்ற சில மாற்றங்கள் தேவைப்பட்டதால், ஜீவாவை நாயகனாக வைத்து படத்தை இயக்கி முடித்தாராம் அமீர்.

இதையும் படியுங்களேன் -இதுக்குகூடவா போஸ்டர் விடுவீங்க.!? ரெம்ப சோதிக்காதீங்க.! தனுஷை கெஞ்சும் ரசிகர்கள்.!

அதன் பிறகு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று 'கண்ணபிரான்' எனும் திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறியுள்ளார். அந்த கதையும் விஜய்க்கு மிகவும் பிடித்து போனதாம்.

ஆனால், ஏதோ சில காரணங்களால் கண்ணபிரான் திரைப்படத்தை இயக்க முடியவில்லையாம். ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் விஜய் வைத்து இயக்க முடியாது. விஜய்யின் மார்க்கெட் தற்போது மிகவும் உயர்ந்து விட்டது. மீண்டும் அவரை இறக்கி வேறு ஒரு கதை களத்தில் கதை கூற முடியாது. ஆதலால், தற்போதுள்ள விஜயின் மார்க்கெட் ஏற்றவாறு வேறு ஒரு கதையை விஜய்க்காக தயார் செய்து வேண்டுமானால் ஒரு படத்தை இயக்கி முடிக்கலாம் என்று அமீர் கூறினார்.

Next Story