விஜய், அஜித் வரலைன்னா அவ்ளோதான் போல!.. காத்து வாங்கிய கலைஞர் 100 விழா.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

கலைஞர் 100 விழா தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிண்டி ரேஸ் கோர்ஸ் ஓப்பன் ஸ்டேடியம், 20 ஆயிரம் நாற்காலிகள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மேலும், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆனால், முக்கியமான தமிழ் சினிமா நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்ட இரு பெரும் நடிகர்களும் வராத நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு கூட்டமே வரவில்லை என விஜய், அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திடீரென ஒன்றாக சேர்ந்து ரஜினிகாந்தையும் சூர்யாவையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு புடிச்ச விஷயம்!.. இப்படி விக்னேஷ் சிவனுக்கு எல்லாமே வினையா முடியுதே.. ஏன்?
கலைஞர் 100 விழாவில் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அஜித்தை போலவே அவரும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார். இந்த இருவர் மட்டுமின்றி சிம்பு, விஷால், விக்ரம் என ஏகப்பட்ட நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
திரை பிரபலங்களை தாண்டி பொதுமக்கள் என எண்ணிப் பார்த்தால் வெறும் 700 பேர் தான் வந்தனர் என்றும் நிகழ்ச்சி 4 மணிக்கு ஆரம்பிக்கும் என சொல்லி விட்டு 4 மணி நேரம் தாமதமாக ஆரம்பித்தது உள்ளிட்ட பல குளறுபடிகள் காரணமாக கூட்டம் வரவில்லை என்கின்றனர். தனுஷின் கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கே இதை விட அதிக கூட்டம் கூடியது என்கின்றனர்.
இதையும் படிங்க: இதென்ன மேஜிக்? ‘விடாமுயற்சி’யில் அருண்விஜய்யா? அவரே சொன்ன சூப்பரான அப்டேட்
தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரும் தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த முதல்வருமான கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா செய்கிறோம் என அறிவித்து விட்டு உரிய ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் செய்ய தவறி விட்டது தான் காரணம் என்று கூறுகின்றனர்.