அஜித் vs விஜய்: இதுக்கு முன்னாடி எத்தனை படங்களில் மோதி இருக்காங்க.. யாருக்கு அதிக வெற்றி.. சுவாரஸ்ய தகவல்
பொங்கல் தினத்தில் அஜித்துடன் விஜய் மோத இருப்பது பெரிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடக்கும் போது எத்தனை முறை யார் ஜெயிச்சதுணு ஒரு கணக்கு சொல்லுவாங்கள அதுமாதிரி விஜய் மற்றும் அஜித் எத்தனை படங்களில் மோதி இருக்காங்க. அதில் எத்தனையில ஜெயிச்சு இருக்காங்க தெரிஞ்சுக்கலாமா?
கோயமுத்தூர் மாப்பிள்ளை-வான்மதி:
விஜய் இயக்குனர் ரங்கநாதன் இயக்கத்தில் கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்திலும், அஜித் அகத்தியன் இயக்கத்தில் வான்மதி படத்திலும் நடித்திருந்தனர். இந்த படம் தான் முதல் போட்டியில் மோதி கொண்டது. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்து போட்டி ட்ராவில் முடிந்தது.
பூவே உனக்காக - கல்லூரி வாசல்:
விக்ரமன் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரையரங்குகளில் 150 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை புரிந்தது. அதே நேரத்தில் அஜித் இரண்டாம் நாயகனாக நடித்த கல்லூரி வாசல் பெரிய ஃப்ளாப் படமாக மாறியது.
ரெட்டை ஜடை வயசு- காதலுக்கு மரியாதை:
செல்வகுமார் இயக்கத்தில் மந்திராவுடன் அஜித் இணைந்து நடித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை தழுவியது. அதே நேரத்தில் ஒரு வாரம் கழித்து பாசில் இயக்கத்தில் வெளியான காதலுக்கு மரியாதை ஹிட்டாகி பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் விஜய் 2 படம் லீடில் இருக்கிறார்.
உன்னைத்தேடி- துள்ளாத மனமும் துள்ளும்:
இதிலும் விஜய் நடிப்பில் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது. இருந்தும் உன்னை தேடி படமும் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.
உன்னை கொடு என்னைத் தருவேன் - குஷி:
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்துடன் அஜித்தின் உன்னை கொடு என்னைத் தருவேன் மோதியது. குஷி 150 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அஜித்தின் படம் ஃப்ளாப் ஆனது.
தீனா - ஃப்ரண்ட்ஸ்:
இவர்களின் சினிமா வாழ்க்கைகே முக்கிய படமான அமைந்த இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்தது.
வில்லன் - பகவதி:
இரண்டு படங்களுமே ஆக்ஷன் படங்கள் தான். அதுவரை லவ்லி பாயாக வந்த விஜய் முதல்முறையாக ஒரு தாதா வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இருந்தாலும் இரண்டு வேடங்களில் வித்தியாசம் காட்டி வெற்றியை தட்டி சென்றது அஜித் குமார் தான்.
ஆஞ்சநேயா - திருமலை:
அஜித்தின் சினிமா வாழ்க்கையிலே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது ஆஞ்சநேயா தான். ரமணா இயக்கத்தில் விஜய் நடித்த திருமலை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.
பரமசிவன் - ஆதி:
ரமணா இயக்கத்தில் வெளியான ஆதி மிகப்பெரிய தோல்வி படமாக விஜயிற்கு முடிந்தது. ஆனா, பி.வாசு இயக்கத்தில் பரமசிவன் திரைப்படம் அஜித்துக்கு டீசண்ட் வெற்றியை வாங்கி கொடுத்தது.
போக்கிரி - ஆழ்வார்:
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படம் மாஸ் வெற்றியை பெற்றது. 200 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்தது. ஆனால், அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரை அரங்கை விட்டு ஓடியது தான் மிச்சம்.
ஜில்லா - வீரம்:
இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரிலீஸான கடைசி படம் இது தான். இந்த படங்கள் இரண்டுமே நல்ல வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது. ஆனா மோதிய எல்லா படங்களிலுமே வில்லன் மற்றும் பரமசிவனை தவிர அஜித்தால் விஜயை ஜெயிக்கவே முடியவில்லை. இந்நிலையில் இந்த பொங்கல் போட்டியில் யார் ஜெயிப்பார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.