இன்னும் திருந்தாத சன் பிக்ச்சர்ஸ்.! விஜயை வைத்து என்ன செய்துள்ளனர் தெரியுமா.?!
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த நாளே யாஷ் நடிப்பில் கேஜிஎப்2 திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் தற்போதே ரசிகர்கள் மத்தியில் இந்த இரு திரைப்படங்களும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த சில வருடங்களாக விஜய் படத்திற்கு இசை வெளியீட்டு விழா அனைத்து படங்களுக்கும் நடந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நேரத்தில் கூட மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறைவான ரசிகர்களை கொண்டு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது பீஸ்ட் இசை வெளியீட்டு விழாவிற்கு நடக்காது எனும் நிலைமை வந்துவிட்டது.
இதனால் விஜய் தரப்பு தற்போது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சன் பிக்சர்ஸ் தற்போது பட விளம்பரத்துக்காக தங்களது வழக்கமான பாணியை கையாண்டு உள்ளது.
வழக்கமாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு சன் டிவியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். அது பட விளம்பரத்திற்கு ஏதுவாக அமையும். அதுபோல தற்போது விஜய் மற்றும் பீஸ்ட் படக்குழுவினர் உடன் ஓர் நிகழ்ச்சியை படமாக்கியுள்ளனராம்.
இதையும் படியுங்களேன் - விஜய் படத்துக்கு அவளோ காசு தர முடியாது.! காலை வாரிய தியேட்டர்கள்.!
இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. அடுத்த வாரம் இதன் டிவி பிரமோஷன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழா இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது இந்த டிவி நிகழ்ச்சி ஒரு ஆறுதல் தரும் என கூறப்படுகிறது. இருந்தாலும் விஜய் சொல்லும் குட்டிக்கதை இப்போ மிஸ்ஸிங் தான்.