20 கோடி வசூல்!.. கில்லி பட இயக்குனர் தரணியை சந்தோஷப்படுத்திய தளபதி விஜய்!.. வேறலெவல் சம்பவம்!..

Published on: April 25, 2024
---Advertisement---

20 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் வெளியாகி சுமார் 20 கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிலை போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், வினியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் இயக்குனர் தரணி உள்ளிட்டோர் நேற்று நடிகர் விஜய்யை சந்தித்து கில்லி ரீ ரிலீஸ் வெற்றியை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகர் விஜய் தன்னை சந்திக்க வந்த கில்லி படக்குழுவினரை வரவேற்றார். பெரிய ரோஜா மாலை எல்லாம் போட்டு நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி சினிமாவை விட்டுப் போய் விடாதீங்க, வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க என கோரிக்கை வைக்க அவரும் சரி என்று சொல்லும் வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி வைரலாகின.

இதையும் படிங்க: விஷாலிடம் இருந்து எஸ்கேப்பான சுந்தர் சி!.. இப்படி வசமா சிவகார்த்திகேயனிடம் சிக்கிட்டாரே!..

அந்த சந்திப்பில் கில்லி படத்தின் இயக்குனர் தரணியும் கலந்து கொண்ட நிலையில், அவருக்கு நடிகர் விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம் இந்தியாவில் வைரலாகி வருகிறது.

தில், கில்லி, தூள், குருவி, ஓஸ்தி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தரணி. பல ஆண்டுகளாக புதிய படங்களை இயக்காமல் இருந்து வரும் அவர், மீண்டும் படங்களை இயக்க ஆரம்பிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சினிமாவுக்கு எண்ட் கார்டு போடாதீங்க!.. பெரிய மாலை போட்டு விஜய்யிடம் கோரிக்கை வைத்த பிரபலம்!..

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்த கில்லி ரீ ரிலீஸ் படம் இந்த அளவுக்கு வசூல் பேட்டி நடத்தும் என விஜய் ரசிகர்களே எதிர்பார்க்காத நிலையில், தியேட்டர்களில் அந்த படம் சக்கை போடு போட்டு வருகிறது.

கில்லி படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்களிடம் நேரடியாக சென்று இயக்குனர் ஹரி விஷாலை வைத்து தான் இயக்கியுள்ள ரத்னம் படம் நல்லா இருக்கும் கில்லி படத்தை போலவே பரபரப்பாக இந்தப் படமும் உங்களைக் கவரும் கண்டிப்பாக தேர்தலுக்கு வந்து ரத்னம் படத்தை பாருங்கள் என புரோமோஷன் செய்தது எல்லாம் வேற லெவல் சம்பவம் என விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமாகி 24 வருடம்!.. அஜித்துடன் செம ரொமான்ஸ் பண்ணும் ஷாலினி!.. இது செம பிக்!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.