ஹீரோவா நடித்த முதல் படமே படுதோல்வி... இதற்கு விஜய் சொன்ன பதில்தான் ஹைலைட்!..
நடிகர் விஜய் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் உச்சத்தில் இருப்பவர். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் அதிகம். இவரது படங்கள் என்றால் எல்லோருக்குமே கொண்டாட்டம் தான். தற்போது அரசியலிலும் இறங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தைத் தந்தாலும், இன்னொரு பக்கம் வருத்தத்தையும் தருகிறது. ஆரம்பகாலத்தில் விஜய் சந்தித்த பிரச்சனைகள் என்ன? அதற்கு அவரது பதில் என்ன என்று பார்ப்போம்.
விஜய் ஹீரோவாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்தப் படம் படுதோல்வி அடைந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஒரு ஹீரோவுக்கே உரிய எந்த உடற்கட்டும் இவரிடம் இல்லை. முகமும் இல்லை என்பது தான் இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம். அப்போது பத்திரிகைகளும் வரிந்து கட்டிக் கொண்டு இவரை விமர்சித்தன. ஆனால் இதற்கெல்லாம் விஜய் என்ன பதில் சொன்னார் என்று பார்ப்போமா...
நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் எனக்கு எதிரா நிறைய விமர்சனம், கேலி எல்லாம் வந்தது. இதை மறைக்கறதுக்கு ஒண்ணுமில்ல. அதை எல்லாம் நான் டிஸ்கரேஜ்மெண்டா எடுத்தா இன்னைக்கு உங்க முன்னாடி நின்னு பேசிக்கிட்டு இருக்க முடியாது.
ஒருவரோட வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆணோ பெண்ணோ இருப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா என்னோட வெற்றிக்குப் பின்னாடி பல அவமானங்கள் தான் இருக்கு. வாழ்க்கையில முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும். அதுல இருக்குற கஷ்டத்தைப் பார்க்குறவங்க தோற்கிறார்கள். அதுல இருக்குற வாய்ப்பை பயன்படுத்துறவங்க வெற்றி பெறுகிறார்கள். இவ்வாறு தளபதி விஜய் அப்போது கூறினார்.
அதே போல இவர் வாரிசு நடிகர் தானே. அதனால் தான் வெற்றி பெற்றார் என்பார்கள். 100 சதவீதம் நான் தந்தையின் உதவியால் தான் திரைக்கு வந்தேன். ஆனால் அப்படி வந்த வாரிசு நடிகர்கள் பலர் காணாமல் போயிருக்காங்க. நான் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார் தளபதி விஜய்.