நடிகர் விஜய் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் உச்சத்தில் இருப்பவர். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் அதிகம். இவரது படங்கள் என்றால் எல்லோருக்குமே கொண்டாட்டம் தான். தற்போது அரசியலிலும் இறங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தைத் தந்தாலும், இன்னொரு பக்கம் வருத்தத்தையும் தருகிறது. ஆரம்பகாலத்தில் விஜய் சந்தித்த பிரச்சனைகள் என்ன? அதற்கு அவரது பதில் என்ன என்று பார்ப்போம்.
விஜய் ஹீரோவாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்தப் படம் படுதோல்வி அடைந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஒரு ஹீரோவுக்கே உரிய எந்த உடற்கட்டும் இவரிடம் இல்லை. முகமும் இல்லை என்பது தான் இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம். அப்போது பத்திரிகைகளும் வரிந்து கட்டிக் கொண்டு இவரை விமர்சித்தன. ஆனால் இதற்கெல்லாம் விஜய் என்ன பதில் சொன்னார் என்று பார்ப்போமா…
நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் எனக்கு எதிரா நிறைய விமர்சனம், கேலி எல்லாம் வந்தது. இதை மறைக்கறதுக்கு ஒண்ணுமில்ல. அதை எல்லாம் நான் டிஸ்கரேஜ்மெண்டா எடுத்தா இன்னைக்கு உங்க முன்னாடி நின்னு பேசிக்கிட்டு இருக்க முடியாது.
ஒருவரோட வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆணோ பெண்ணோ இருப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா என்னோட வெற்றிக்குப் பின்னாடி பல அவமானங்கள் தான் இருக்கு. வாழ்க்கையில முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும். அதுல இருக்குற கஷ்டத்தைப் பார்க்குறவங்க தோற்கிறார்கள். அதுல இருக்குற வாய்ப்பை பயன்படுத்துறவங்க வெற்றி பெறுகிறார்கள். இவ்வாறு தளபதி விஜய் அப்போது கூறினார்.
அதே போல இவர் வாரிசு நடிகர் தானே. அதனால் தான் வெற்றி பெற்றார் என்பார்கள். 100 சதவீதம் நான் தந்தையின் உதவியால் தான் திரைக்கு வந்தேன். ஆனால் அப்படி வந்த வாரிசு நடிகர்கள் பலர் காணாமல் போயிருக்காங்க. நான் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார் தளபதி விஜய்.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…