விஷயம் கேள்விப்பட்டு அடிச்சு புரண்டு மனைவியோடு வந்த விஜய்!.. என்னவா இருக்கும்?..

by Rohini |   ( Updated:2023-03-30 07:54:51  )
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் படுபிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க காஷ்மீரை சுற்றி இருக்கும் பகுதிகளில் நடைபெறும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அமைய இருப்பதால் கடந்த மாதம் முழுவதும் படக்குழு காஷ்மீரிலேயே செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு தான் மொத்தப் படக்குழுவும் சென்னைக்கு திரும்பியது. மீண்டும் அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது. இதனிடையில் நடிகர் அஜித்தின் தந்தை மரணத்திலும் விஜய் கலந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயை பற்றி அவரோடு பணிபுரிந்த இயக்குனர் ரமணா சில தகவல்களை பகிர்ந்தார். அந்த செய்திதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ரமணா விஜயை வைத்து ‘ஆதி’ படத்தை இயக்கியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் விஜயின் பல படங்களிலும் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். இயல்பாகவே இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்திருக்கிறது. ஒரு சமயம் இயக்குனர் ரமணாவுக்கு தொண்டையில் கேன்சர் வந்து மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாராம்.

விஷயம் கேள்விப்பட்டு விஜய் தனது மனைவியுடன் ரமணாவின் வீட்டிற்கே வந்து விட்டாராம். அப்போது கடும் மழையாம்.மழையையும் பொருட்படுத்தாமல் மனைவி சங்கீதாவுடன் தன்னை பார்க்க வந்தார் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ‘கிளம்புங்க, லண்டன் போய் சிகிச்சை மேற்கொள்ளலாம், நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்’ என்று விஜய் ரமணாவிடம் கூறினாராம்.

விஜயின் வளர்ச்சி ஒருபக்கம் அளவில்லாது இருந்தாலும் அவரின் அந்த குணம் மாறவே இல்லை என்று அவருடன் பழகிய பல பிரபலங்கள் கூறிவருகின்றனர். வெளியே தெரியாமலேயே விஜயும் சரி அஜித்தும் சரி பல உதவிகளை செய்து தான் வருகின்றனர்.

இதையும் படிங்க : சிம்புவுக்கு எதிராக சதி செய்வது யார் தெரியுமா?? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்…

Next Story