விஜயின் வளர்ச்சிக்காக எஸ்.ஏ.சி இதையெல்லாம் செய்தாரா.?! இணையத்தில் உலவும் செய்தி.!

by Manikandan |
விஜயின் வளர்ச்சிக்காக எஸ்.ஏ.சி இதையெல்லாம் செய்தாரா.?! இணையத்தில் உலவும் செய்தி.!
X

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர். இவரின் அடுத்தடுத்த படங்களுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று அவர் திரைப்பட செய்தி அன்றாட செய்தியாக மாறும் அளவிற்கு வளர்ந்துள்ளது மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இவ்வளவு உயரத்தில் வளர்ந்துள்ள விஜய், ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வெற்றிக்காக மிகவும் தடுமாறினார் என்பதும் உண்மை. அதற்காக அவரது தந்தையும் இயக்குனருமான S.A.சந்திரசேகர் மிகவும் உதவி புரிந்தார். தொடர்ந்து விஜய்யை வைத்து பல படங்கள் இயக்கினார்.

நாளைய தீர்ப்பு, விஷ்ணு, ரசிகன், நெஞ்சினிலே, செந்தூரப்பாண்டி, ஒன்ஸ்மோர் எனும் பல திரைப்படங்களை விஜயை வைத்து அவரது தந்தையும் இயக்குனருமான S.A.சந்திரசேகர் இயக்கினார். அதே போல விஜய்யின் ரசிகர் மன்றங்களையும் இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதும் உண்மை.

விஜய்க்கு இளைய தளபதி பட்டம் கொடுத்தது, அதேபோல தன் மகனுக்கு ஏற்றவாறு கமர்சியல் கதையம்சம் கொண்ட கதைகளை உருவாக்கி அதனை படமாக்கினார். அதற்கு முன்னர் S.A.சந்திரசேகர் அந்த மாதிரியான கமர்சியல் திரைப்படங்களை இயக்கியது இல்லை என்பது உண்மை.

வேறு ஒரு தகவலும் தமிழ் சினிமாவில் உலா வந்தது. அதாவது தமிழ் சினிமாவில் தனது மகன் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் மற்ற நடிகர்களும் அதே கமர்சியல் கதைகளில் வந்து விடக்கூடாது என்பதிலும் சந்திரசேகர் குறியாக இருந்தார் என கூறப்பட்டது அது எந்த அளவு உண்மை என தெரியவில்லை.

இதையும் படியுங்களேன் - திருந்தாத பாலா.! சூர்யாவின் மாஸ்டர் பிளான்.! ஸ்கெட்ச் போட்டு தூக்க போகிறாராம்.!

ஆனால் விஜய் நல்ல நடிகராக மாறிய பிறகு, S.A.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள் பெரிதாகப் போகவில்லை என்பதும் உண்மை. சரத்குமாரை வைத்து தோஸ்த் என்ற திரைப்படத்தையும், அருண் விஜயை வைத்து முத்தம் என்ற படத்தையும் அவர் இயக்கி இருந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது எதேர்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்தாரா என்பது யாருக்கும் தெரியாது.

தனது மகனுக்காக தான் இயக்கும் பாணியை மாற்றி விட்டு முழுக்க முழுக்க கமர்ஷியல் கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கினர். SAC. தற்போது விஜய்யை ஓர் மாஸ் கமர்சியல் நடிகராக மாற்றியதற்கான பெரும் பங்கு இயக்குனர் சந்திரசேகருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Next Story