விஜயின் மாமனாரிடம் கெஞ்சிய ஷோபா சந்திரசேகர்... வாரிசு முடிந்தவுடன் வரிந்து கட்ட காத்திருக்கும் குடும்பம்... என்ன நடந்தது?
விஜய் மற்றும் அவர் அப்பா இடையே புகைந்து வரும் பனிப்போரை உடனே முடிக்க சங்கீதாவின் அப்பா களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் தளபதி என்ற ஒற்றை வார்த்தைக்கே அவரின் ஜாதகத்தினை சொல்லும் அளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் விஜயின் ஆரம்பகாலமே மிகவும் கஷ்டமாக தான் அமைந்தது. அவரை சிலர் மோசமாக கூட விமர்சித்து இருந்தனர்.
ஆனால் விஜயை நடிகனாக்க அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான். மிகப்பெரிய அளவில் முயற்சி எடுத்தார். ஏகப்பட்ட செலவு செய்தார். தொடர்ச்சியாக பல படங்களை இயக்கினார். எல்லாமே சுமார் வெற்றி தான் என்றாலும் அவர் அப்போது போட்ட அஸ்திவாரமே விஜயினை ஒரு நடிகனாக ரசிகர்களிடம் நிலை நிறுத்தியது.
விஜயிற்கு மற்ற இயக்குனர்களிடம் இருந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வர துவங்கியது. காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றி அவரின் திரை வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதன்பின்னர், காதல் படங்களிலும் ஆக்ஷன் படங்களிலும் நடித்து இன்று தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் முதல் இடத்தில் இருக்கிறார்.
ஆனால் அவரின் திரை வாழ்க்கையை துவக்கி வைத்து தனது தந்தையை மறந்து விட்டதாக கோலிவுட்டிலே கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது. விஜயிற்கு பிடிக்காத விஷயங்களை செய்ததன் மூலம் அவருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் முட்டிக்கொண்டதாம். இதனால் அவருடன் பேசுவதையே தவிர்த்து வருகிறார் விஜய்.
இந்த பிரச்சனையை விஜயின் தாயார் ஷோபா, வெளிநாட்டில் இருக்கும் சம்மந்தியிடம் கொண்டு சென்று இருக்கிறார். இருவருக்கும் இடையில் பேசி சமாதானம் செய்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு இருக்கிறாராம்.
விஜய் வாரிசு படத்தின் சூட்டிங்கினை முடித்து விட்டு குடும்பத்துடன் எப்போதும் போல வெளிநாடு சுற்றுலாவிற்கு செல்ல இருக்கிறார். அப்பயணத்தில் தனது மாமனார் வீட்டில் தங்கும் போது இந்த சமாதான பேச்சு வார்த்தை நடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.