விவாகரத்தா? பாஸ் அவங்க வெள்ளி விழால கொண்டாடுறாங்க..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!

கோலிவுட்டில் விஜய் தன்னுடைய லியோ படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டு தற்போது வெளிநாட்டில் விடுமுறையை கழித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜய் தன்னுடைய திருமண நாளை கொண்டாடி வருவதாகவும், மேலும் சில சுவாரஸ்ய சம்பவங்களும் வெளியாகி இருக்கிறது.

இலங்கை தமிழரான சங்கீதாவினை விஜய் 25 ஆகஸ்ட் 1999 அன்று லண்டனில் நெருங்கி உறவுகளுக்கு இடையே திருமணம் செய்து கொண்டார். அப்போது தான் விஜய் கோலிவுட்டில் ஒரு இடத்தினை பிடித்து இருந்தால் திருமணம் முடிந்தபின்னரே செய்தியாளர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு! ஜெய்லர் சக்சஸ் பார்ட்டியில் நெல்சனை கடுப்பாக்கிய ரஜினி!

இத்தம்பதிக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இருவருமே வேட்டைக்காரன் மற்றும் தெறி படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர். இதை தொடர்ந்து சஞ்சய், திவ்யா இருவருமே தங்களின் பள்ளி படிப்பினை முடித்து விட்டதாகவும் அவர்களின் மேற்கல்விக்காக வெளிநாட்டில் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு துணையாக விஜயின் மனைவி சங்கீதாவும் தற்போது வெளிநாட்டில் தான் இருக்கிறார்.

பெரிதாக வெளியில் மனைவியுடன் வரும் விஜய் சமீபகாலமாக மீடியாக்கள் கண்ணில் தனியாகவே தென்படுகிறார். மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சங்கீதா தமிழ் மீடியாவில் எதுலையுமே அகப்படவில்லை. இதனால் விஜய் மற்றும் சங்கீதாவிற்கு இடையில் தகராறாக இருக்குமோ என யூகங்கள் கிளம்பியது.

இதையும் படிங்க : ரஜினி, கமலை இந்நேரம் பந்தாடியிருப்பாரு! குடியையும் தாண்டி கேப்டன் வாழ்க்கையை சீரழித்த அந்த விஷயம்

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷுடன் விஜய் நெருக்கமாக இருப்பதாகவும் விரைவில் சங்கீதாவினை டைவர்ஸ் செய்யலாம் என்று கூட கிசுகிசுத்தனர். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி சங்கீதா பிள்ளைகள் படிக்காக அவருக்கு துணையாகவே சென்று இருக்கிறார்.

விஜயுடன் அரசியல் வாழ்க்கையில் எண்ட்ரியாக இருக்கும் சூழலில் குடும்பம் சற்று தள்ளி இருப்பதே நல்லது என நினைப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்று அவர்கள் வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்களின் திருமணநாள் கொண்டாட்டம் குறித்து எந்த புகைப்படமாகவது வெளிவந்தால் இந்த எல்லா சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it