Sneha: விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சினேகா. இந்நிலையில் இப்படத்திற்கு முன்னாலே அவரிடம் அண்ணியாக கேட்டபோது அதை அவர் மறுத்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சினேகா. தமிழ் பெண் என்பதாலும் குடும்ப பாங்கான சாயலும் அவருக்கு தொடர்ச்சியாக கோலிவுட்டில் வாய்ப்புகளை குறித்தது.
இதையும் படிங்க: அண்ணாத்த படத்தில் நயன் இல்ல.. நாங்கதான் மெயின்னா இருந்தோம்.. குஷ்பு சொன்ன ஆச்சரிய தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல்ஹாசன் என எல்லோரிடம் இணைந்து நடித்து வந்தார். சக நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் நடிப்பை விடாமல் சினேகா தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
முக்கிய கேரக்டரில் நடித்து வரும் சினேகாவிற்கு ஹீரோயின் வாய்ப்பு வருவதில்லை.கடைசியாக தனுஷின் பட்டாசு திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாகவும், இன்னொரு தனுஷுக்கு மனைவியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சினேகா விஜயின் ஒரு படத்தில் அண்ணியாக நடிக்க வாய்ப்பு வந்ததாம்.
அது குறித்து விசாரிக்கும் போது திரைப்படம் கடந்தாண்டுவெளியான வாரிசு திரைப்படத்தில் சங்கீதா நடித்த கேரக்டரில் முதலில் கேட்கப்பட்டவர் சினேகா தானாம். ஆனால் எதையும் யோசிக்காதவர் என்னால் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது எனக் கூறி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணாத்த படத்தில் நயன் இல்ல.. நாங்கதான் மெயின்னா இருந்தோம்.. குஷ்பு சொன்ன ஆச்சரிய தகவல்
அது குறித்து சினேகாவிடம் கேட்டபோது, எனக்கு சில விஷயங்கள் தோன்றும். அதனால் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் உடனே மறுத்துவிடுவேன். அப்படித்தான் அந்த அண்ணி கேரக்டர் திரைப்படத்தையும் மறுத்தேன்.
அதை தொடர்ந்து தான் எனக்கு கோட் திரைப்படத்தில் வாய்ப்பு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 23 வருடத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடித்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன் நடிகை சினேகா விஜய் உடன் இணைந்து வசீகரா திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
அத்திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்யவில்லை என்றாலும் ரசிகர்களிடம் இன்னும் இந்த ஜோடியின் முக்கிய படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…