கோட் படத்தில் விஜய், திரிஷாவின் அட்டகாசமான டான்ஸ்... அந்தப் பாட்டு ஞாபகம் வருதா..?
விஜய், திரிஷா என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது கில்லி தான். இந்த படத்தில் விஜய், திரிஷா இணைந்து மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். தரணி இயக்கத்தில் 2004ல் படம் தெறிக்க விட்டது. ரசிகர்களை ஒவ்வொரு காட்சியும் சீட்டின் நுனியில் அமர வைத்தது. அதன் பிறகு அந்தப் படத்தின் ரீரிலீஸ்சும் பெரிய அளவில் வசூல் சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு விஜய், திரிஷா இணைந்து நடித்த படங்கள் திருப்பாச்சி, ஆதி, லியோ என்று வந்துள்ளன. இருந்தாலும் கில்லியில் சொல்லி அடித்த பாடல் அப்படி போடு தான். அதற்கு ஈடாக எந்தப் படத்திலும் பாடல் வரவில்லை. இப்போது அந்தக் குறையைப் போக்கும் வகையில் கோட் படத்தில் அதே ஜோடி ஒரு படத்தில் பட்டையைக் கிளப்பும் வகையில் பாடலைப் பாடி நிறைவேற்றி இருக்கிறது.
கில்லி படத்தில் அப்படி போடு படத்திற்கு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடி இருப்பார்கள். அது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. அப்போது ஆடல் பாடல், கச்சேரி, கரகாட்டம் என எந்த நிகழ்ச்சி என்றாலும் அந்தப் பாடல் தவறாமல் இடம்பெற்றது.
அந்த வகையில் அது ஒரு டிரெண்டிங்கான பாடல். அந்தப் பாணியில் இப்போது கோட் படத்திலும் ஒரு பாடல் பட்டையைக் கிளப்பப் போகிறதாம். இது குறித்த அப்டேட் படம் வெளியாகும் முன்னரே வந்து விடுமாம்.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் வருகிறது. செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி வருகிறது. இந்த சிறப்பு தினங்களை முன்னிட்டு கோட் படம் ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது. சமீபத்தில் அர்ச்சனா கல்பாத்தி, விஜய், வெங்கட்பிரபு ஆகியோர் விஜயகாந்தின் வீட்டுக்கு மரியாதை நிமித்தமாக சென்றார்களாம். படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க அனுமதி கொடுத்ததற்காக பிரேமலதாவுக்கு நன்றி சொன்னார்களாம்.