எதுக்குப்பா மெடிக்கல் டெஸ்ட்லாம் எடுக்குறீங்க? விஜயை வச்சு செய்யும் வெங்கட் பிரபு - ரகசிய பயணத்தில் ‘தளபதி 68’
விஜய் தற்போது லோகேஷின் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழாவையும் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏனெனில் ரஜினிக்கு பதிலடி கொடுப்பாரா விஜய் என்ற நோக்கத்திலேயே அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : ரஜினிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது! தட்டிவிட்ட சக இயக்குனர்கள்… அட போங்க சார்!
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு வழியாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். அதுபோக லோகேஷ் மற்றும் அவரது டெக்னீஷியன்கள் படத்தின் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
லியோ படத்தை பற்றி பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும் விஜயின் அடுத்தப் படமான தளபதி 68 படத்திற்கான அப்டேட்டையும் அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். தளபதி 68ல் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பது என்பது உறுதியாகி விட்டது.
ஏற்கனவே விஜய் கத்தி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். மேலும் அழகிய தமிழ் மகன் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் அந்த இரு படங்களை விட இந்த தளபதி 68 படத்தில் விஜயை இன்னும் தத்ரூபமாக காட்ட ஒரு புதுவித டெக்னாலஜியை பயன்படுத்தப் போவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : எல்லாம் ஓகே! ரெண்டு மாசம்தான் – அடிச்சு தூள் கிளப்பப் போறாரு! ‘விடாமுயற்சி’க்கு கிடைத்த வெற்றி
அதற்காக விஜய் , வெங்கட் பிரபுவோடு இணைந்து தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸின் நிறுவனரான கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருக்கிறார்களாம். அங்கு உள்ள பிரபல நிறுவனத்தில் விஜயை வைத்து பாடி ஸ்கேன் முறையை செய்து அதற்கேற்றாற் போல் தொழில் நுட்பத்தை பயன்படுத்திதான் இரட்டை வேடங்களை வடிவமைக்கப் போகிறார்களாம்.
ஆனால் இது இப்ப வேண்டுமானால் ஒரு சவாலான விஷயமாக இருக்கலாம். இதை ஜீன்ஸ் படத்தில் மிக அற்புதமாக நடத்தி காட்டியிருப்பார் சங்கர்.