ட்ரோல் ஆகும் கோட்!.. கடுப்பான விஜய்!.. தளபதி 68 படத்தின் தலைப்பு அது இல்லையாம்!..

Published on: December 27, 2023
thalapathy 68
---Advertisement---

Thalapthy 68: லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயை சிறு வயது தோற்றத்தில் காட்டவிருக்கிறார்கள்.

ஒருபக்கம் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனும் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அயலானில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அல்ல அந்த நடிகருக்கும் சம்பளம் இல்லயாம்.!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பங்காளதேஷ், தென்னாப்பிரிக்கா என பல நாடுகளிலும் எடுத்து வருகின்றனர். இப்போது வரை இப்படத்தை தளபதி 68 என்றுதான் படக்குழு சொல்லி வருகிறார். ஒருபக்கம் இப்படத்திற்கு GOAT- கோட் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து கோட் என்கிற பெயரில் போஸ்டர் டிசைனையும் விஜயின் ரசிகர்கள் உருவாக்க துவங்கிவிட்டனர். ஆனால், அஜித் ரசிகர்கள் இந்த தலைப்பை கிண்டலடித்தும் வருகிறார். படம் வரட்டும்.. ஆட்டை வெட்டி மசாலா போடுவோம் என பதிவிட்டு முழுதாக உரித்த ஆட்டை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: கமலிடமிருந்து வந்த போன் கால்!.. ரஜினி செய்த வேலை!.. ஆடிப்போன சக நடிகர்…

ஏற்கனவே தமிழகத்தில் ஆடு என ஒரு அரசியல்வாதியை கிண்டலடிக்கும் நிலையில் விஜயையும் அந்த லிஸ்ட்டில் வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஆனால், இது அப்படத்தின் தலைப்பு அல்ல. இந்த ட்ரோல் எல்லாவற்றையும் விஜய் பார்த்திருப்பார். ஒருவேளை அதுதான் தலைப்பாக இருந்தால் விஜய் அதை மாற்ற சொல்வார் என சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் வருகிற டிசம்பர் 31ம் தேதி அல்லது ஜனவரி 1ம் தேதி இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அப்போது இப்படத்தின் உண்மையான தலைப்பு என்னவென்று தெரியவரும்.

இதையும் படிங்க: இப்பவே ஆப்பு வைக்க ரெடியாகிட்டாங்க! தளபதி 68 ஆல் படாதபாடு படப் போகும் விஜய்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.