திரையுலகில் யாரும் செய்யாத ஒன்றை செய்த விஜய் ஆண்டனி!.. அட ரஜினியே பண்ணலயே!...

by சிவா |
vijay antony
X

vijay antony

திரையுலகில் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைக்கும் திரைப்படங்களில் சில பாடல்களை பாடியும் இருக்கிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒன்றும் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவரெல்லாம் இல்லை. சவுண்ட் இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமாவில் வேலை செய்தவர். அப்படித்தான் இசையமைப்பாளராகவும் மாறினார். இவர் இசையமைத்த ‘நாக்க மூக்க’ பாடல் அதிரி புதிரி ஹிட் ஆனது.

vijay antony

நான் என்கிற திரைப்படம் மூலம் நடிகராக மாறினார் விஜய் ஆண்டனி. அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சலிம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கோடியில் ஒருவன் என ரசிகர்களை கவர்ந்தார். இதில் பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் அடித்தது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன் என சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்திற்காக ஒரு சண்டைக்காட்சியில் நடித்தபோது படகு கவிழ்ந்து காயமடைந்து சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளார்.

vijay antony

இவர் திரையுலகில் யாரும் செய்யாத ஒன்றை செய்துள்ளார். சினிமா துறைக்கு வர ஆசைப்படும் எல்லோரும் சென்னையில் வடபழனியில் உள்ள ஏவிஎம் நிறுவனத்தை ஏக்கமாக பார்ப்பார்கள். ஏனெனில், பல வருடங்களாக சினிமாவை எடுத்து வரும் நிறுவனம் அது. பல இயக்குனர்களை, நடிகர்களை உருவாக்கிய நிறுவனம். ஏவிஎம் நிறுவனம்தான் சினிமா என பலரும் நினைத்த காலமும் உண்டு. இந்த நிறுவனத்துக்குள் சினிமாவை சாராத நபர்கள் உள்ளே நுழையவே முடியாது.

ஆனால், இதே ஏவிஎம் நிறுவனத்தில் ஒரு இடம் வாங்கி ஸ்டுடியோ கட்டியுள்ளார் விஜய் ஆண்டனி. ஒருவேளை அதை வைராக்கியமாக வைத்து செய்தாரோ என்னவோ!,. அவரை தவிர திரையுலகில் வேறு யாரும் இதை செய்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அவ்வளவு ஏன் நடிகர் ரஜினி கூட ஏவிஎம் நிறுவனத்தில் இடம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முழு பூசணிக்கா சோத்துல மறையுமா?!.. பிக் சைஸ் மனச காட்டி இழுக்கும் ஷாலு ஷம்மு!…

Next Story