நான் சிகரத்தை தொட்டுட்டேன்! மகளை பற்றி சந்தோஷமாக பேசிய விஜய் ஆண்டனியின் வைரல் வீடியோ

by Rohini |   ( Updated:2023-09-20 06:11:46  )
meera
X

meera

Vijay Antony Daughter: இந்த உலகத்தில் ஒரு அற்புதமான உறவு என்றால் அது அப்பா மகளுக்கும் இடையே இருக்கும் உறவுதான். என்னதான் அம்மா ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் ஒரு பெண் குழந்தை தன் அப்பாவைத் தேடியே செல்லும். அதே போல்தான் தன் பெண் மகளை தாய்க்கும் அதிகமாக நேசிக்கக் கூடியவராகத்தான் ஒரு அப்பா இருப்பார். அந்த வகையில் இன்று தன் செல்ல மகளை இழந்து பரிதவிக்கும் விஜய் ஆண்டனிக்கு யார் வந்து ஆறுதல் சொன்னாலும் அவர் சோகம் தீராது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பழைய வீடியோக்கள் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் பெரும்பாலும் தன் குடும்பத்தை பற்றியும் தன் குழந்தைகளை பற்றியுமே பேசியிருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளை கொண்ட விஜய் ஆண்டனி தன் மகளிடம் நீயே மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்துக் கொள் என்ற உரிமையை கொடுத்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

ஏனெனில் இவ்ளோ பெரிய பொறுப்பை தன்னிடம் கொடுத்திருக்கும் அப்பாவிடம் இனிமேல் எது வேண்டுமானாலும் அப்பா அது வாங்கித்தா, இது வாங்கித்தா என்று குழந்தைகள் தானாக வந்து கேட்பார்கள். என் குழந்தைகளும் அப்படித்தான் என்னிடம் வந்து கேட்கிறார்கள். அந்த ஒரு சுதந்திரத்தை குழந்தைகளுக்கு முதலில் கொடுங்கள். மேலும் வெளி உலக நட்பை விட உங்கள் குழந்தைகளுக்கு தாயும் தந்தையும் தான் முதலில் நண்பர்கள். அப்படி பழகுங்கள் என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிப்பு வரவில்லை என்பதற்காக அவர்களை மேலும் மேலும் புண்படுத்தாமல் படிப்பை ஒரு செயல் மூலமாக வரவைக்க வேண்டும். படிப்பை மட்டுமே வைத்து ஒரு குழந்தையை மதிப்பிடக்கூடாது . சமுதாயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். ஆனால் முதல் மார்க் எடுக்க வேண்டும். அவனை விட அதிகமாக எடுக்க வேண்டும் என்று திணிக்காதீர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் தரேன்… சரோஜாதேவிக்காக சூர்யா செய்த செயல்.. முந்திக்கொண்டு முன்னே வந்த உதயநிதி!

மேலும் கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ளவன்தான் சிகரத்தை அடைந்து விட்டான் என்று இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் சிகரம் என்பது மன அமைதி. அந்த வகையில் நான் சிகரத்தை அடைந்து விட்டேன். ஏனெனில் பணம், மதம், ஜாதி இதை எல்லாவற்றையும் தாண்டி குடும்பத்தையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வதுதான் நான் சொல்லவரும் சிகரம்.

அதனால் தான் நான் சிகரத்தை எப்பவோ அடைந்து விட்டேன். என் குடும்பத்தை நான் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். நீங்களும் நாளை அந்த சிகரத்தை அடைந்து விடுங்கள் என்று ஒரு அற்புதமான சொற்பொழிவை சமீபத்தில் ஆற்றியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு மகளாக இருந்து கொண்டு ஏன் இந்த மாதிரியான காரியத்தை செய்தார் என்றுதான் ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது.

இதையும் படிங்க: நான் தப்புனா பாரதியாரும் தப்புதான்… பாடல் வரியை மாற்ற முடியாது… கறாராய் சொன்ன வாலி…

Next Story