உதவி கேட்டு வந்த தனுஷ்.. ஆடிப்போன விஜய் ஆண்டனி.. அப்படி ஒரு சம்பவம்!...

by Rohini |   ( Updated:2023-07-12 04:55:30  )
dhanush
X

dhanush

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து இன்று ஒரு முக்கியமான நடிகராக நல்ல அந்தஸ்தில் இருப்பவர் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. இவர் தனது இசை பணியை தொடங்குவதற்கு முன்பு ஸ்டூடியோவில் பகுதிநேர வேலையை தான் செய்து வந்தார். ஆரம்ப காலங்களில் ஒலி பொறியாளராக பணியாற்றினார் விஜய் ஆண்டனி.

ஏகப்பட்ட படங்களுக்கு இவர் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறாரா. அதன் பிறகு ஆல்பம், ஆவண படங்கள் என தனது இசையை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி இருக்கிறார். வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், டிஸ்யூம் போன்ற பல படங்களின் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக விஜய் ஆண்டனி திகழ்கிறார்.

இதையும் படிங்க : செல்லாக்காசுதான்! வீட்டுக்குள்ள பிரச்சினையை முதல்ல முடி.. அப்புறம் வா – விஜயை நார் நாராக கிழிக்கும் பத்திரிக்கையாளர்

இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. வேட்டைக்காரன் படம் இசையமைக்கும் பொழுதே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வரத் தொடங்கியது. இவரின் நடிப்பில் நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, காளி ,கொலைகாரன், கோடியில் ஒருவன், திமிரு புடிச்சவன் போன்ற பல படங்கள் அடங்கும்.

இந்த நிலையில் தன்னுடைய இசை அனுபவங்களையும் நடிப்பு அனுபவங்களையும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது பல நடிகர்களுடன் அவர் நடித்த அனுபவத்தை பற்றி பேசினார். குறிப்பாக விஜய் ஆண்டனியும் நடிகர் விஷாலும் வகுப்பு தோழர்களாம்.

அது மட்டும் அல்லாமல் நடிகர் தனுஷை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறினார். ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் ஒரு சில ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் ஆண்டனி சவுண்ட் இன்ஜினியராக பணி புரிந்திருக்கிறாராம். அதன் மூலமாக பழக்கமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

dhanush1

dhanush1

இதையும் படிங்க : பெர்ஃபார்மன்ஸுக்குனு அப்படி பண்ணேன்! அத நக்கி சாப்பிடுனு சொல்லிட்டாரு – கொடுமையை அனுபவித்த நடிகை

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை திருமணம் செய்த புதிதில் விஜய் ஆண்டனியிடம் தனுசை அழைத்துக் கொண்டு வந்தாராம். அப்போது ஐஸ்வர்யா விஜய் ஆண்டனியிடம் "இவருக்கு இசை பற்றி கொஞ்சம் தெரியும். அவர் சில ஐடியாக்களை உங்களிடம் கேட்க வேண்டும் என நினைக்கிறார். அதனால் அவருக்கு தேவையானதை சொல்லிக் கொடுங்கள்" என கூறினாராம்.

விஜய் ஆண்டனியும் அப்போது ஒரு வளர்ந்து வரும் இசையமைப்பாளராக தான் இருந்திருக்கிறார். ஐஸ்வர்யா இப்படி சொன்னதும் ஏதோ அவருக்கு கொஞ்சம் தான் தெரியும் என நினைத்து கொஞ்சம் பில்டப் எல்லாம் பண்ணாராம் விஜய் ஆண்டனி. ஆனால் பேசப் பேச தான் விஜய் ஆண்டனியை விட அதிக இசைஞானம் பெற்றவராக தனுஷ் இருந்தாராம்.

dhanush2

dhanush2

இதையும் படிங்க : பாத்ரூம் போன இடத்துல சில்க் இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல – பட்ட கஷ்டத்தை பகிர்ந்த ஷகீலா

இதை ஒரு பேட்டியில் கூறிய போது தனுஷை பற்றி விஜய் ஆண்டனி "கடைசியில் எனக்கு குருவாக மாறிப்போனார் தனுஷ். அந்த அளவுக்கு இசையில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் அதிக இசைஞானம் கொண்டவராகவும் இருக்கிறார் தனுஷ்" என தெரிவித்தார்.

dhanush3

dhanush3

Next Story