இவர்தான் கோலிவுட்டின் அடுத்த விஜயகாந்த்! நடிகரின் செயலால் ஆடிப்போன தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மாதிரி இன்னொரு நடிகரை காண்பது என்பது அரிது. ஆனால் எம்ஜிஆரின் குண நலன்கள் விஜயகாந்திடம் இருந்ததனால் தான் கேப்டனை கருப்பு எம்ஜிஆர் என்று அழைத்தனர். இதுவரைக்கும் விஜயகாந்த் மாதிரியான ஒரு நடிகரை யாரும் அடையாளம் காணவில்லை. அந்த அளவுக்கு பிறர் நலனில் மிகவும் அக்கறை கொண்டவராகவே இருந்தார்.
தயாரிப்பாளர்களின் மன நிலையை சூழ்நிலையை நன்கு புரிந்து வைத்தவர் விஜயகாந்த். தயாரிப்பாளருக்கு வீண் செலவுகள் எதையும் வைக்க விட மாட்டார். கேரவனை விரும்பாதவர். சாப்பாடு விஷயத்திலும் அனைவருக்கும் கொடுக்கப்படும் உணவுகளை தான் அவரும் விரும்புவார். இதுவே அவர் சொந்த புரடக்ஷன் என்றால் விஜயகாந்துக்கு என்ன சாப்பாடுகளை வழங்குகிறார்களோ அதே சாப்பாட்டைத்தான் அனைத்து ஊழியர்களுக்கு வழங்கச் சொல்லுவார்.
இதையும் படிங்க :ஐய்யோ பார்த்தா மிஸ் பண்ணிட்டோமே? ஏகே-62வில் சம்பவம் பண்ண காத்திருந்த விக்கி – சந்தானம் சொன்ன சீக்ரெட்
அனைவரையும் சமமாக மதிக்கக் கூடியவர். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான டி.சிவா கோலிவுட்டின் அடுத்த விஜயகாந்த் இவர்தான் என்று ஒரு குறிப்பிட்ட நடிகரை அடையாளம் கண்டுள்ளார். அவர்தான் நடிகர் விஜய் ஆண்டனி. ஏற்கெனவே விஜய் ஆண்டனி பல பேருக்கு அவரால் முடிந்தளவுக்கு உதவிகளை செய்து வருபவர்.
இவரை வைத்து டி.சிவா அக்னிச்சிறகுகள் என்ற ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் கூடவே அருண்விஜயும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனின் இளையமகளான அக்ஷரா ஹாசனும் நடிக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் ஆண்டனி நடந்து கொண்ட விதத்தை மிகவும் பெருமிதத்தோடு கூறினார் டி.சிவா.
அதாவது முன் கூட்டியே எனக்கு கேரவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவாராம் விஜய் ஆண்டனி.கேரவனை தவிர்த்து பிளாட் பாரத்தில் தான் அமர்ந்திருப்பாராம். மேலும் தனக்காக எதையும் ஸ்பெஷலாக செய்யவேண்டாம் என்றும் சொல்லிவிடுவாராம். வீட்டில் இருந்தே முருக்கு, சுண்டல் போன்றவைகளை கொண்டு வந்து விடுவாராம்.
அதுமட்டுமில்லாமல் சீக்கிரம் வந்துவிடுவாராம். படப்பிடிப்பு முடிந்து அனைவரையும் அனுப்பிவிட்டு கடைசியில் தான் செல்வாராம். அருண் விஜய் போர்ஷனை முதலில் எடுக்க சொல்லுவாராம். ஏனெனில் அருண்விஜய் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அவரை முதலில் எடுத்துவிட்டு அனுப்ப சொல்லிவிடுவாராம். இப்படி விஜயகாந்திடம் இருக்கும் அந்த குணங்களை விஜய் ஆண்டனியிடம் பார்க்க முடிந்தது என டி.சிவா கூறினார்.
இதையும் படிங்க :சினிமாவால் மொட்டை ராஜேந்திரன் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் – விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பரிதாபம்!!