விஜய் ஆண்டனியை மோசமாக விமர்சிக்கும் சமூகம்… இவர்களை ஏன் கேட்கவில்லை… கொதிக்கும் விமர்சகர்…

by Akhilan |   ( Updated:2024-03-17 07:59:50  )
விஜய் ஆண்டனியை மோசமாக விமர்சிக்கும் சமூகம்… இவர்களை ஏன் கேட்கவில்லை… கொதிக்கும் விமர்சகர்…
X

Vijay antony: நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய படத்தின் விழா ஒன்றில் ஜீசஸும் குடித்து இருக்கார் எனக் கூறி இருப்பார். ஆனால் அவர் பேசியதில் இருந்து சிலவற்றை வெட்டி ஒட்டி ஒரு பிரச்னையை கூட்டம் தொடங்கி விட்டது. அதனை எதிர்க்கும் விதமாக பிரபல விமர்சகர் அந்தணன் கண்டித்து இருக்கிறார்.

ரோமியோ படத்தின் போஸ்டரில் பாலுக்கு பதிலாக சரக்கை கொடுப்பது போல அமைக்கப்பட்டு இருக்கும். இந்த போஸ்டர் குறித்து அந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி ஆண் குடிப்பது தப்பென்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். ஏசுவும் குடித்து இருக்கிறார் எனக் கூறி இருப்பார்.

இதையும் படிங்க: குறைந்த பட்ஜெட்!.. ஆனா பல கோடி லாபம்!.. விஜயகாந்த் படங்களின் லிஸ்ட் இதோ!..

ஆனால் அந்த விஷயத்தின் முன்னும் பின்னும் விஜய் ஆண்டனி சில விஷயங்களை பேசி இருப்பார். அந்த வீடியோவை திரித்து போட்டதால் விஜய் ஆண்டனி கிறிஸ்துவர்களை அவமதித்துவிட்டதாக அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்து வருகிறது. விஜய் ஆண்டனி ஒரு கிறிஸ்துவர் தான். அவர் சொன்னதுக்கே பிரச்னை செய்கின்றனர். அவர் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை வீட்டின் முன்னர் வந்து பிரச்னை செய்வோம் எனவும் கூறி இருப்பார்கள்.

இதுகுறித்து பேசி இருக்கும் அந்தணன், தினகரனின் மனைவி இவாஞ்சலின் ஒரு வீடியோ போட்டு இருப்பார். அவங்க வீடு இல்லாமல் தவித்ததாகவும் காலையில் கண் திறந்து பார்த்தால் வீடு, கார் எல்லாம் கண் முன் இருந்ததாம். இது எவ்வளோ பெரிய பொய். இப்படி சொந்த மதத்தில் இருந்தே கிறிஸ்துவத்தினை அசிங்கப்படுத்தியவர்களை ஏன் கேட்கவில்லை?

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் படத்துக்கு சூனியன் வச்சிராதீங்கப்பு… வெளியாகும் அப்டேட்களால் கடுப்பாகும் விஜய் ரசிகர்கள்…

அவங்களை கேட்காத நீங்க ஏன்? விஜய் ஆண்டனியை மட்டும் கேட்குறீகள்? வெள்ளை அங்கியை போட்டுக்கொண்டு கையை நீட்டினால் தொப்பென விழுக்கும் பல வீடியோக்கள் இருக்கிறது. இதை ட்ரான்ஸ் என்ற மலையாள படத்தில் காட்டி இருப்பார்கள். அந்த படத்தினை ஒருமுறை பார்த்தால் தெரியும்.

எல்லா மதங்களிலும் இந்த பித்தலாட்டங்கள் இருந்தது. ஆனால் கருத்து சுதந்திரத்துக்காக பேசியதை ஏன் பிரச்னை பண்ணனும். ஆனால் நல்ல வேலையாக விஜய் ஆண்டனி துரிதமாக ஒன்று செய்தார். பொதுவாக இந்த பிரச்னைகளில் சம்மந்தப்பட்ட பிரபலங்கள் லேட்டாகவே பேசுவார்கள். இதில் விஜய் ஆண்டனி உடனே தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கொடுத்துவிட்டார். இதுக்கு மேல் பேசுவது அசிங்கம் எனவும் காட்டமாகவே தெரிவித்து இருக்கிறார்.

vijay antony

Next Story