விஜய் பற்றி விஜய் ஆண்டனி ஒரு பேட்டியில் கூறியது தற்போது வைரலாகி வருகின்றது. ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி, படங்களுக்கு மியூசிக் மட்டுமே போட்டு வந்தார். ஒரு இசையமைப்பாளராக பல படங்களில் இவர் இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அப்படி ஹிட் அடித்த பாடல்கள் அமைந்த படங்கள் பெரும்பாலும் தோல்வியையே தழுவி இருக்கின்றன. அதனாலேயே அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.
பாடல்கள் ஹிட்டானாலும் படங்கள் ஹிட்டாவது இல்லை. அதனால் தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு குறைய தொடங்கியது. அந்த நேரத்தில்தான் நடிக்கலாம் என்று முடிவை எடுத்தார் விஜய் ஆண்டனி. அப்போது அவர் இசையமைத்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விஜய் வந்திருந்தாராம். அப்போதுதான் விஜய்யுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது என்று விஜய் ஆண்டனி கூறினார். அதன் பிறகு வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு தன்னை ரெக்கமண்ட் செய்தது விஜய் தான் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
அவர் நல்லா மியூசிக் போடுகிறார், நம்ம படத்துக்கு அவரே மியூசிக் போடட்டும் என வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியை விஜய் ரெக்கமண்ட் செய்து இருக்கிறார். வேட்டைக்காரன் படத்திற்கு முன்பே நான் நடிக்கப் போகிறேன் என ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அந்த வாக்கையும் நான் காப்பாற்ற வேண்டும். அதே நேரம் இந்த படத்திற்கும் நான் இசையமைக்க வேண்டும் .அதனால் வேட்டைக்காரன் படத்தில் நான் இசை அமைத்தேன். அப்படியே தொடர்ந்து சுக்கிரன் வேலாயுதம் போன்ற படங்களுக்கும் இசையமைக்கக்கூடிய வாய்ப்பு வந்தது.
கொடுத்த வாக்கையும் மீறக் கூடாது என்பதற்காக நடிக்கவும் வந்து விட்டேன். ஆனால் நான் ஹீரோவாக வேண்டும் என நினைப்பதற்கு முன்பு எனக்கு விஜயின் படங்கள் வந்திருந்தால் கண்டிப்பாக நான் நடிக்க வந்திருக்க மாட்டேன். ஏனெனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடலும் ஹிட்டாகி படமும் ஹிட் ஆனது விஜயின் படங்கள் மூலமாகத்தான். முன்பே இது நடந்திருந்தால் அடுத்தடுத்த படங்களுக்கு நான் இசையமைத்து ஒரு இசையமைப்பாளராகவே நான் டிராவல் செய்திருப்பேன். ஆனால் நடிக்கப் போகிறேன் என வாக்கு கொடுத்ததனால தான் அந்த வாக்கை காப்பாற்றுவதற்காக நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அது மட்டுமல்ல சின்னத்தாமரை பாடலை சுசித்ரா தான் பாட வேண்டும் என சொன்னதே விஜய் தான். அவருக்கு மியூசிக் பற்றி எல்லாம் நன்றாகவே தெரியும். இந்த பாடல் சுசித்ரா பாடினால் தான் நன்றாக வரும். அவருடைய வாய்ஸ் அப்படிப்பட்ட ஒரு வாய்ஸ் என சொல்லி சுசித்ராவை பாட வைத்தது விஜய் தான். இப்போது வரை அந்த பாடலை கேட்கும் போது அந்த பாடலுக்கு இருக்கிற ஒரு வைப் அது வேறு மாதிரி. அது விஜய்னால்தான் என விஜய் ஆண்டனி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.












