Connect with us
maniratnam new

Cinema History

மியூசிக்கே தெரியாம வந்து சான்ஸ் கேக்குறியா? மணி சார் விரட்டிய இசையமைப்பாளர்.. அட அவரா?!..

தமிழில் பெரும் இயக்குனர்களாக பல வருடங்களாக வலம் வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். 1985 இல் வெளிவந்த பகல்நிலவு திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கிய மெளன ராகம் திரைப்படம் பெரும் வெற்றி கண்டது.

நடிகை ரேவதியின் மார்க்கெட்டை அதிகரித்து விட்டதில் இயக்குனர் கே. பாலச்சந்தருக்கு பிறகு மணிரத்தினத்திற்கு அதில் முக்கிய பங்குண்டு. அதன் பிறகு நாயகன், தளபதி என பெரும் நடிகர்களை வைத்து வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வந்தார் மணிரத்தினம்.

இதையும் படிங்க:அவர் மியூசிக் போட்டா நான் நடிக்க மாட்டேன்!.. அடம்பிடித்த ராமராஜன்!.. நடந்தது இதுதான்!..

மணிரத்தினம் அவருக்கென தனிப்பட்ட படமாக்கும் திறனை கொண்டிருந்தார். அந்த திறனே அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. இதனால் நடிகர்கள் பலரும் அவரது திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதுண்டு.

maniratnam

maniratnam

மணிரத்தினம் மறுத்த இசையமைப்பாளர்:

ரோஜா படத்தில் துவங்கி இப்போது இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை மணிரத்தினத்தின் அனைத்து திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ஏ.ஆர் ரகுமான். ஆனால் இதற்கு நடுவே மணிரத்தினம் படத்தில் இசையமைக்க வேண்டும் என்கிற ஆசையில் ஒருவர் மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்டார்.

இதையும் படிங்க:டச்சப் பாயா இருந்து வளர்ச்சியடைந்த ஐந்து நடிகர்கள்!.. லிஸ்ட்ல இவரும் இருக்காரா..??

அவர் வேறு யாருமல்ல. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான். விஜய் ஆண்டனி சினிமாவிற்கு வந்தபோது அவருக்கு அதிகமாக இசையமைக்க தெரியவில்லை. ஓரளவு கற்றுக்கொண்டிருந்தார். அதை வைத்து சில படங்களுக்கு இசையும் அமைத்துவிட்டார். இந்த நிலையில் மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

vijay antony

அவரை நேரில் அழைத்து அவரது இசையை கேட்ட மணிரத்தினம் இன்னமும் அவர் சரியாக இசையமைக்க கற்றுக்கொள்ளவில்லை என நினைத்தார். எனவே அவரை நிரகாரித்துள்ளார் மணிரத்தினம். ஆனால் அதற்கு பிறகு விஜய் ஆண்டனி இசையமைத்த பல பாடல்கள் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்தன.

இதையும் படிங்க:ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்த நளினி!.. மகன்தான் காரணமாம்… வினோதமா இருக்கே…

google news
Continue Reading

More in Cinema History

To Top