Connect with us
vijay

Cinema News

விஜய் படத்துல நடந்த பாலிட்டிக்ஸ்! கோபப்பட்ட விஜய் ஆண்டனி – என்ன செய்தார் தெரியுமா?

Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய படங்கள் வசூலில் வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய ஹீரோக்களை பொறுத்தவரைக்கும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை.

அந்த ஹீரோவை எப்படி மாஸாக காட்டலாம்? ரசிகர்களை எப்படி கைத்தட்ட வைக்கலாம் என்பதே அவர்களை வைத்து எடுக்கும் இயக்குனர்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. விஜய், அஜித் இவர்கள் படங்களும் அதே போலத்தான்.

இதையும் படிங்க: விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு சூனியம் வைத்துக்கொண்ட மன்சூர் அலிகான்!. இனிமே எல்லாம் போச்சி!..

சமீபகாலமாக வெளியான அஜித், விஜய் படங்களை எடுத்துக் கொண்டால் கதை அந்தளவுக்கு புதியதாக இல்லை. வழக்கமாக எல்லா படங்களிலும் பார்த்த கதைகள்தான். ஆனால் அவர்களை காட்டும் விதத்தில் ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி ரசிகர்களை ஆரவாரப்படுத்துகிறார்கள்.

அதுவும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே அங்கு ஏகப்பட்ட பாலிட்டிக்ஸ் நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் படத்தில் வேறொரு மாதிரியாக இருக்கும். இந்த நிலையில் விஜய்  நடித்த வேலாயுதம் படத்திலும் சில பாலிட்டிக்ஸ் நடந்ததாக பாடலாசிரியர் பிரியன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: வர கோபத்துக்கு பிக்பாஸ் வீட்டுக்கு போயி நல்லா கேட்பேன்!… விசித்ரா மீது காண்டான ஷகிலா….

அந்தப் படத்திற்காக அவர் எழுதிய டைட்டில் சாங்கான ‘வேலா வேலா வேலாயுதம்’ ஓப்பனிங் சாங்காக இருக்கும் என நினைத்தாராம். ஏனெனில் படத்தின் பெயரை ஒட்டிய பாடல்தான் எப்பொழுதுமே ஓப்பனிங் சாங்காக இருக்கும். அதுவும் விஜய் படம் என்றால் அது இல்லாமல் இருக்குமா?

அப்படித்தான் படக்குழுவிலும் பேச்சு அடிப்பட்டதாம். ஆனால் பார்த்தால் வேறொரு பாடலை ஓப்பனிங் சாங்காக வைத்திருக்கிறார்கள். அது பிரியனுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் அங்கே ஏதோ ஒரு பாலிட்டிக்ஸ் நடந்திருப்பதாக பிரியன் கூறினார்.

இதையும் படிங்க: பிரபாஸோட அடுத்த பட ஹீரோயின்!.. தியேட்டரில் எப்படி ரசிகர்களிடம் சிக்கியிருக்காங்கன்னு பாருங்க!

இது விஜய் ஆண்டனிக்கு  தெரியவர கோபத்தில் அந்த வேலா வேலா வேலாயுதம் பாடலை படமுழுக்க வருகிற மாதிரி ஆங்காங்கே போட்டு தெறிக்க விட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top