மழை பிடிக்காத மனிதன் டீசரிலும் இளையராஜா பாட்டு!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி?..

by Saranya M |
மழை பிடிக்காத மனிதன் டீசரிலும் இளையராஜா பாட்டு!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி?..
X

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் நேற்று வெளியானது. முதலில் இந்த படத்தில் விஜயகாந்த் நடித்த படம் என்ன சொல்லப்பட்டது. அவருக்கு பதிலாக சரத்குமார் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்துள்ளார்.

மழை பிடிக்காத மனிதன் டீசர் கவித்துவமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படமும் ஆக்‌ஷன் படமாகவே இயக்கி இருக்கிறார் விஜய் மில்டன். பத்து என்றதுக்குள்ள படத்தில் பார்த்த அதே விஷுவல் ஃபீல் இந்த படத்திலும் வருகிறது. இது எந்தளவுக்கு விஜய் ஆண்டனிக்கு வெற்றிப் படமாக அமையும் என்பது தெரியவில்லை. டீசரை பார்த்தால் எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருக்கிறது.

இதையும் படிங்க: பிரம்மாண்டத்தில் மயங்கி போன அஜித்! பழசுதானாலும் இவர விட்டா யாருமில்ல.. அட போங்கப்பா

”உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை” எனும் இளையராஜாவின் பாடலை அப்படியே படத்தின் டீசர் இறுதியில் வைத்து ஏதாவது சர்ச்சையை கிளப்பி படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டலாம் என நினைத்தாரோ விஜய் மில்டன் எனத் தெரியவில்லை. இந்த படத்தின் டீசர் இறுதியில் இளையராஜா பாடலை வைத்துள்ளார்.

ஏற்கனவே ரஜினிகாந்தின் கூலி படத்துக்கும், மஞ்சுமெல் பாய்ஸ் பாடலுக்கும் எதிராக இளையராஜா நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், இந்த பாடலை ஏன் பயன்படுத்தினீங்க என்கிற கேள்வியை விஜய் ஆண்டனியிடம் செய்தியாளர்கள் வைக்க அதற்கான உரிமத்தை பெற படக்குழுவினர் இளையராஜா தரப்பிடம் முயற்சி செய்து வருகிறோம் என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: பாவமன்னிப்பு தந்த பகவானே!.. கோட்டான கோட்டி நன்றி!.. விஜய் ஆண்டனியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

ஆகவே அனுமதி பெறுவதற்கு முன்பாகவே இந்த பாடலை வைத்து அடுத்த ஏழரையை விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படம் கூட்டியுள்ளதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விஜய் ஆண்டனியிடம் கேட்டால் அவரே ஒரு பாடலை போட்டுத் தந்திருப்பாரே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து சினிமாவில் பலரும் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி அவரை கடுப்பாகி வருவதற்கு காரணம் அவர் மீதுள்ள பிரியமா? அல்லது அவரது இசையை பயன்படுத்திக் கொண்டு அவருக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்க கூடாது என்கிற எண்ணமா? என்றும் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கேப்டன் குடும்பம் போட்ட கண்டீசன்! உஷாரான விஜய்.. பதறி ஓடிய விஜய் ஆண்டனி

Next Story