விஜயையே மிரள வைத்த அருண் விஜய்...யாரிடம் இதை கூறினார் தெரியுமா?...

by Rohini |   ( Updated:2022-09-05 06:16:52  )
vijay_main_cine
X

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. நிலையான இடத்தை நடிகர் விஜய், நடிகர் அஜித் பிடித்திருந்த நிலையிலும் அடுத்தடுத்ததாக சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, விக்ரம் இப்படி ஏராளமான நடிகர்கள் வரிசையில் இருக்கின்றனர்.

vijay2_cine

இவர்களின் படங்கள் ரிலீஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் போல தான் அமையும். அதே நேரத்தில் தன்னுடைய தலைவனுக்காக கடும்போட்டியே போடுவார்கள். இப்படி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்கள் மத்தியில் சத்தமே இல்லாமல் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தன் வழியே வெற்றி நடை போடும் நடிகன் தான் நடிகர் அருண்விஜய்.

இதையும் படிங்கள் : ஐ லவ் யூ BABY… ஒத்த VIDEO’ல மொத்த பேரையும் கிறுகிறுக்க வைத்த வாணி போஜன் – வீடியோ!

vijay1_cine

ஏராளமான கஷ்டங்கள், துயரங்கள் இவற்றை சகித்துக் கொண்டு ஒரு பெரிய நடிகரின் வாரிசு என்ற கெத்து எல்லாமல் தன் கடும் முயற்சியால் எல்லா துன்பங்களையும் தகர்த்தெறிந்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் ரீஎன்ரியே ஒரு மாஸ் ஹீரோவுடன் மாஸான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை இமைதூக்க வைத்து விட்டார். அன்றிலிருந்து இன்று வரை ஓயாமல் வெற்றிப்படிகளை தன்னுடையதாக்கிக் கொண்டு வருகிறார்.

vijay3_cine

இதையும் படிங்கள் : 7 வருடம் கழித்து விஜய்க்கு சரியான பதிலடி கொடுத்த அஜித்… தோல்வியை ஒப்புக்கொள்ளாத தளபதி.?

வரிசையான ஆக்‌ஷன் படங்கள், க்ரைம் திரில்லர் படங்கள் போன்ற படங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு வருகின்றார். ஒரு சமயம் நடிகர் சாந்தனு தன்னுடயை படவாய்ப்புகள் குறித்து இப்படியே இருக்கிறோமே என்று நடிகர் விஜயிடம் வருத்தப்பட்டாராம். அப்போது விஜய் எல்லாவற்றிற்கும் ஒரு காலம் வரும். எல்லா தடைகளையும் நான் எல்லாம் தாண்டி வரலையா? ஏன் நல்ல உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் நடிகர் அருண்விஜயை எடுத்துக்கோ. நல்ல நிலைமையை அடைந்து விட்டார். என்னாமா பண்றான். நன்றாக நடிக்கிறான். என அருண்விஜயை புகழ்ந்து கூறினாராம் நடிகர் விஜய்.

Next Story