தன் கெரியரில் இரண்டே நடிகர்களுக்கு மட்டும் பின்னனி பாடிய விஜய்!.. இவர்களுக்கா?..

vijay
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தென்னிந்திய சினிமாவே கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருகிறார்.

vijay1
விஜயின் படம் பூஜை போட்ட உடன் கோடிக் கணக்கில் விளம்பரப்படுத்தப்பட்டு வசூலை அள்ளிவிடுகின்றனர். மேலும் 120கோடி வரை சம்பளம். யாரும் நினைக்க முடியாத வளர்ச்சியை எட்டியுள்ளார் நடிகர் விஜய். பாடகராக, நடிகராக , தயாரிப்பாளராக வலம் வரும் விஜய் தான் நடிக்கும் படத்தில் எப்படியாவது ஒரு பாடலை பாடிவிடுவார்.
இது ரசிகன் படத்தில் இருந்தே பின்பற்றி வருகிறார். ஒரு பாடல் கண்டிப்பாக இவரது குரலில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கும். காரணம் அவரது தாயான சோபா ஒரு பாடகி. அதன் மரபு வழியே அந்த வழக்கமாக கூட எடுத்துக் கொள்ளலாம். இது வரை ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள விஜய் வேறு யாருக்காவது பின்னனி குரல் பாடியுள்ளரா என்றால் நிச்சயமாக உண்டு.

vijay2
பெரியண்ணா படத்திற்காக சூர்யாவிற்காக ஒரு பின்னனி குரல் பாடியுள்ளார். ‘ நான் தம் அடிக்காத ஸ்டைலை பாத்து தனலட்சுமி ’ என்ற பாடலை சூர்யாவிற்காக அந்த படத்தில் விஜய் பாடியிருக்கிறார். அதே போல் நடிகர் விக்னேஷ் நடித்த வேலை என்ற படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்த படத்தில் ‘காலத்துக்கேத்த ஒரு கானா’ என்ற பாடலில் விக்னேஷுக்காக பாடியிருப்பார்.
கிட்டத்தட்ட 36 பாடல்களை பாடிய விஜய் சமீபத்தில் வெளியான ரஞ்சிதமே பாடல் சக்க போடு போட்டது. இப்படி தன் திறமையை பல வழிகளில் காட்டி வருகிறார் நடிகர் விஜய். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் இணைந்துள்ள விஜய் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

vijay3
எப்படியும் அந்தப் படத்திலும் இவரது குரலில் கண்டிப்பாக ஒரு பாடல் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. இசையமைப்பாளரான அனிருத் கண்டிப்பாக விஜயை பாட வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நக்கலடித்த கமல்.. பழிவாங்கிய பாக்கியராஜ்.. 16 வயதினிலே படப்பிடிப்பில் இவ்வளவு நடந்துச்சா!..